கொஞ்சம் கூட மதிக்காத இலங்கை-மனித உரிமை அமைப்பு
பிரஸ்ஸல்ஸ்: அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டது தொடர்பான விசாரணை தொடர்பாக ஐ.நா. மனித உரிமை அமைப்பு தொடர்ந்து விடுத்து வரும் கோரிக்கைகளை கொஞ்சம் கூட மதிக்கவில்லை, பதிலளிக்கவும் இல்லை என்று இலங்கை அரசு மீது காட்டமாக பாய்ந்துள்ளார் மனித உரிமை அமைப்பின் தலைவர் நவி பிள்ளை.
பிரஸ்ஸல்ஸ் நகரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இதை நாங்கள் மட்டுமல்ல, ஐ.நா. பொதுச் செயலாளரும் கூட விடுத்து வருகிறார். ஆனால் எதையுமே சட்டை செய்வதாக இல்லை இலங்கை அரசு.
போர்க்குற்றம் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் குறித்து இலங்கை அதிபர் அளித்த உறுதிமொழிகளை கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளரை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதுதொடர்பாக இலங்கை அதிபர் விளக்கமளிக்க வைக்க வேண்டும் எனவும் பொதுச் செயலாளரை கேட்டுக் கொண்டுள்ளோம்.
குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இலங்கை அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதையும் அறிய விரும்புகிறோம்.
முன்பு இலங்கையில், பல்வேறு என்ஜிஓக்கள், மனிதாபிமானப் பணியாளர்கள் கொல்லப்பட்டபோது பல்வேறு விசாரணைக் குழுக்களை இலங்கை அரசு அமைத்தது. தற்போது அவற்றையெல்லாம் அவர்கள் கைவிட்டு விட்டார்கள். இதையும் ஐ.நா. பொதுச் செயலாளருக்கு எடுத்துக் கூறியுள்ளோம்.
மிகத் தீவிரமான குற்றச்சாட்டுக்களைக் கூட இலங்கை அரசு மிக சாதாரணமாக எடுத்துக் கொள்கிறது என்பதற்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன. தற்போது என்ன மாதிரியான முறையில் விசாரணைகள் அமைய வேண்டும் என்பது குறித்து பொதுச் செயலாளருடன் நான் ஆலோசித்து வருகிறேன். ஆனால் எனது யோசனைகளையெல்லாம் இலங்கை அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது என்பதுதான் இதில் முக்கியமானது.
ஐ.நா. மனித உரிமை தலைவரை இலங்கைக்குள் அனுமதிக்க மாட்டோம் என பகிரங்கமாகவும், ஐ.நா. பொதுச் செயலாளரிடத்திலும் இலங்கை கூறி விட்டது. எனவே நான் அங்கு செல்லும் கேள்விக்கே இடமில்லை என்றார் நவி பிள்ளை.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications