வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை சரிந்தது
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்தியாவிற்கு வருகை தந்த வெளிநாட்டு பயணிகள் எண்ணிக்கை செப்டம்பர் மாதத்தில் 4.1 சதவீதம் குறைந்துவிட்டது.
சர்வதேச பொருளாதார தேக்க நிலையும், பன்றி காய்ச்சல் குறித்த அச்சமுமே இதற்குக் காரணம்.
செப்டம்பரில் இந்தியா வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 3.17 லட்சம் தான். இவர்கள் மூலம் ஈட்டப்பட்ட அன்னியச் செலாவணி வருவாய் ரூ.3,978 கோடியாகும்.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுற்றுலாத்துறையின் பங்களிப்பு 6 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications