மனித உரிமையை மீறும் டெல்லி போலீஸ்-கிருஷ்ணசாமி
சென்னை: இலங்கை தூதரகம் முன் சில பூந்தொட்டிகள் உடைக்கப்பட்ட விவகாரத்தில் புதிய தமிழகம் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் வீடுகளுக்குச் சென்று டெல்லி போலீசார் அத்துமீறலில் ஈடுபட்டு வருகின்றனர்.
சாதாரண அரசியல் நடவடிக்கைக்காக எங்கள் தொண்டர்களை தீவிரவாதிகளை தேடுவது போல் டெல்லி போலீசார் நடந்து கொள்வது மனித உரிமையை மீறும் செயலாகும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.
நிருபர்களிடம் அவர் கூறுகையில்,
இலங்கையில் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டு கிடக்கும் 3 லட்சம் தமிழ் அகதிகளை அவர்கள் வாழும் இடங்களுக்கு அனுப்ப வலியுறுத்தி அக்டோபர் 2ம் தேதி டெல்லியில் பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.
அப்போது தமிழ் இளைஞர்கள் சிலர் அங்குள்ள இலங்கை தூதரகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, உணர்ச்சி வேகத்தில் சில பூந்தொட்டிகளை உடைத்திருக்கிறார்கள்.
இதற்காக என் மீதும் கட்சி நிர்வாகிகள் 20 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ஒரு சாதாரண வழக்கு தான். ஆனால், ஏதோ தீவிரவாதிகளை தேடுவது போல் டெல்லியில் இருந்து 20 போலீசார் தமிழகத்திற்கு வந்து முகாமிட்டு தேடி வருகிறார்கள். அத்துடன் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் வீடுகளுக்கு சென்று அத்துமீறலில் ஈடுபட்டு வருகின்றனர்.
சாதாரண அரசியல் நடவடிக்கைக்காக டெல்லி போலீசார் இவ்வாறு நடந்து கொள்வது மனித உரிமையை மீறிய செயல் ஆகும்.
இலங்கையில் 58,000 பேரை சொந்த ஊருக்கு அனுப்புவது ஏற்கனவே இலங்கை அரசு எடுத்த முடிவாகும். கிளிநொச்சி, முல்லைத் தீவு போன்ற இடங்களுக்கு இந்த குழுவினர் செல்லவில்லை.
எனவே, இந்திய அரசு அனைத்து கட்சி எம்.பிக்கள் குழுவை அனுப்ப வேண்டும். முள்வேலிக்குள் முடங்கி கிடக்கும் இலங்கை தமிழர்களை பாதுகாக்கவும், இலங்கை தமிழர்களின் ஒட்டு மொத்த விடுதலைக்கு அரசியல் தீர்வு காணும் வகையில் ஜனவரி மாதம் கோவையில் உலக தமிழர் பாதுகாப்பு மாநாடு நடத்தப்படும் என்றார்.
-
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications