சோமாலியாவில் 4 இந்தியர்களுடன் சிங்கப்பூர் கப்பல் கடத்தல்
கம்பாலா: சோமாலியா அருகே 4 இந்தியர்கள் உள்ளிட்டோருடன் சென்ற சிங்கப்பூர் சரக்குக் கப்பல் கடத்தப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் கடற் கொள்ளையர்கள் அட்டகாசம் செய்து வருகின்றனர். கப்பல்களைக் கடத்தி பொருட்கள், பணம், உணவை கொளையடிப்பது, கப்பலையும் அதில் உள்ளவர்களையும் விடுவிக்க பல மில்லியன் டாலர்கள் கேட்டு மிரட்டுவது, பணததைத் தராவிட்டால் அதில் உள்ளவர்களைக் கொல்வது, கப்பல்களை சிதறடிப்பது என இந்த கடற் கொள்ளையர்கள் அட்டகாசம் மிக அதிகமாகி வருகிறது.
இதனால் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் இப் பகுதியில் தங்களது கடற்படை ரோந்துக் கப்பல்களை நிறுத்தியுள்ளன.
இந் நிலையில் சிங்கப்பூரை சேர்ந்த எம்.வி.கோடா வஷீர் என்ற சரக்கு கப்பல் செஷல்ஸ் தீவுக்குச் சென்று கொண்டிருந்தது.
3 தினங்களுக்கு முன் சோமாலியா அருகே சென்றபோது கடற் கொள்ளையர்கள் கப்பலில் ஏறி அதை கடத்தினர்.
அதில் மொத்தம் 22 ஊழியர்கள் உள்ளனர். அவர்களில் 4 பேர் இந்தியர்கள். கடத்தல்காரர்கள் பணம் கேட்டு கோரிக்கை விடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications