மெல்போர்னில் 3 இந்தியர்கள் மீது தாக்குதல்
Subscribe to Oneindia Tamil
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நேற்றிரவு 3 இந்தியர்கள் தாக்கப்பட்டனர்.
மெல்போர்ன் நகரில் சன் ஷைன் ரயில் நிலையம் அருகே ஆண்டர்சன் சாலையில் நேற்றிரவு 10.30 மணியளவில் வீடு திரும்பிக் கொண்டிருந்த 3 இந்திய மாணவர்களை ஒரு கும்பல் வழிமறிததுத் தாக்கியது.
அவர்களிடமிருந்த செல்போன்கள், கடிகாரம், பர்ஸ் ஆகியவற்றை அந்தக் கும்பல் பறித்துச் சென்றது. இதைத் தர ஒரு மாணவர் மறுக்கவே அவரை மிகக் கொடுமையாக அந்தக் கும்பல் தாக்கிவிட்டுத் தப்பியது.
வேகமாக பரவும் காட்டுத் தீ:
இந் நிலையில் ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு மாகாணங்களில் காட்டுத் தீ வேகமாக பரவி வருகிறது. இப்பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக உள்ளதால் காட்டுத் தீ வேகமாகப் பரவி குடியிருப்புப் பகுதிகளை நெருங்கி வருகிறது.
இதனால் மக்கள் வீடுகளை விட்டுவிட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு சென்று வருகின்றனர்.












Click it and Unblock the Notifications