சீனாவை இந்தியா எதிர்க்கும்போது கேரளாவை ஏன் தமிழகம் எதிர்க்கக் கூடாது - ஜெ.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை...
மத்திய நீர்வளத்துறை அமைச்சரால், கடந்த 1996ம் ஆண்டு நடத்தப்பட்ட கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி கலந்து கொள்ளவில்லை என்று என் அறிக்கையில் எந்த இடத்திலும் நான் குறிப்பிடவில்லை.
என் அறிக்கையை முழுவதுமாகப் படித்து புரிந்து கொள்ளாமல், கருணாநிதி அறிக்கை வெளியிட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. கேரளாவில் உள்ள முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணை கட்டுவதன் விளைவாக, தமிழகத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களுக்கு முக்கிய நீராதாரம் துண்டிக்கப்பட்டு தண்ணீர் கிடைக்காத சூழ்நிலை உருவாகி விடும். இதனால், லட்சக்கணக்கான நம் மக்கள் பாதிக்கப்படுவர். குடிநீர் பற்றாக்குறை ஏற்படும்.
கருணாநிதி டெல்லியில் உள்ளவர்களுக்கு கடிதம் எழுதுவதன் மூலமோ, என் மீது வசைமாரி பொழிந்து நேரத்தை வீணாக்குவதன் மூலமோ அல்லது தன் நடவடிக்கையை நியாயப்படுத்துவதன் மூலமோ, பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்கப் போவதில்லை.
நம் நாட்டில் உள்ள பல மாநிலங்களில், சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்பதற்காக பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே சீனாவிற்கு உட்பட்ட பகுதியில் சீனா அணை கட்ட இந்தியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
நதிநீரை பங்கிட்டுக் கொள்ளும் விஷயத்தில், ஒரு நாடு மற்றொரு நாட்டின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போது, அண்டை மாநிலங்களுடான நதிநீர் பங்கீட்டு பிரச்னை குறித்து வழக்கை துரிதப்படுத்தவும், தன் உரிமைக்காக போராடவும், நியாயமான காரணங்கள் தமிழகத்திற்கு இல்லையா?
கேரளாவும், தமிழகமும் இந்திய தேசியத்திற்கு உட்பட்ட மாநிலங்கள் தானே? ஒரே மாதிரியான பிரச்னையில் இந்திய தேசத்திற்கு ஒரு அளவுகோலையும், தமிழகத்திற்கு ஒரு அளவுகோலையும் பிரதமரும், மத்திய வனத்துறை இணை அமைச்சரும் கடைப்பிடிக்கலாமா? இது நியாயமா?
தமிழக மக்களின் உரிமைகளுக்கு எதிரான புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுப் பணிகளை கேரள அரசு மேற்கொண்டு வருவதில் 90 சதவீத பணிகள் முடிந்து விட்டன. எஞ்சியுள்ள பணிகளும் இன்னும் இரண்டு மாதங்களில் முடிந்து விடும் என்று அதிகாரப்பூர்வமாக சம்பந்தப்பட்ட கேரள அமைச்சர் அறிவித்து இருக்கிறார்.
இதைத் தடுத்து நிறுத்த பிரதமரிடமும், வனத்துறை இணை அமைச்சரிடம் தான் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்து விட்டதாக கருணாநிதியே ஒப்புக் கொண்டு விட்டார்.
கருணாநிதியின் கடிதங்களுக்கு அவர்கள் பதில் கூட அளிக்கவில்லை என்பதையும் கருணாநிதி ஒப்புக் கொண்டு விட்டார். இருப்பினும், மத்திய கூட்டணி அரசிலிருந்து தி.மு.க., கட்சியை விலக்கிக் கெள்ள கருணாநிதி எதையும் செய்ய மாட்டார்.
தமிழக மக்கள் கையில் தான் இந்த வழக்கு தற்போது இருக்கிறது. இதற்குத் தீர்ப்புக் கூற வேண்டியவர்கள் தமிழக மக்கள் தான் என்று தெரிவித்துள்ளார் ஜெயலலிதா.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications