கந்து வட்டி-ஆசிரியர் மனைவி கைது
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் கந்து வட்டி கேட்டு மிரட்டிய ஆசிரியர் மனைவி கைது செய்யப்பட்டார். கந்து வட்டி கேட்டு மிரட்டுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்வோம் என்று காவல்துறை கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் முக்கிய தொழில் நகரங்களான நாங்குநேரி, வள்ளியூர், திசையன்விளை, ஆலங்குளம், பாவூர்சத்திரம், சுரண்டை, நெல்லை, தென்காசி உள்ளிட்ட பகுதிகள் விளங்கி வருகிறது.
வள்ளியூர் அருகேயுள்ள தெற்கு கள்ளிகுளம் பாரதி தெருவை சேர்ந்த மணி என்பவரும், அவரது மனைவி நீலம்மாள் என்பவரும் அதே பகுதியை சேர்ந்த அமலி, ராஜன் ஆகியோரிடம் ரூ.3500 கடன் வாங்கி உள்ளனர்.
கொஞ்சம் கொஞ்சமாக வட்டியும், முதலுமாக திருப்பி கொடுத்து கடனை அடைத்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அமலியும், ராஜனும் இன்னும் பாக்கி ரூபாய் தர வேண்டி உள்ளது என்று கூறி மணி, நீலம்மாள் தம்பதியை மிரட்டியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அவர்கள் வள்ளியூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரை தொடர்ந்து போலீசார் அமலி, ராஜன் இருவர் மீதும் வழக்கு பதிந்து அமலியை கைது செய்தனர்.
ராஜன் தப்பியோடிவிட்டார். தப்பி ஓடிய ராஜன் ஆசிரியராக தெற்கு கள்ளிகுளம் அரசு பள்ளியில் பணிபுரிந்து வருகிறார். நெல்லை மாவடடத்தில் மீண்டும் கந்து வட்டி என்ற தகவலை அறிந்த நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்ரா கார்க், ஆலங்குளம் பகுதியில் உள்ள வட்டிக்கு கடன் வழங்கும் பலரை சந்தித்து ஆலோசனை கூட்டம் நடத்தினார். அவர்கள் மத்தியில் பேசும்போது கந்து வட்டி தொடர்பாக தொடர்ந்து புகார் வந்த வண்ணம் உள்ளது.
கந்து வட்டிக்கு பணம் கொடுத்து ஏழை மக்களை துன்புறுத்துபவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் எச்சரிக்கையால் கந்து வட்டி கும்பல் எஸ்கேப் ஆகி வருகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications