Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுனாமி நிதி மோசடி: மகளிர் மீனவர் சங்க தலைவி கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை: சுனாமி நிவாரண நிதியில் மோசடி செய்த மகளிர் மீனவர் சங்கத் தலைவி சிவகாமி கைது செய்யப்பட்டார்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆஸ்சார்ம் என்ற தொண்டு நிறுவனம் கடந்த 2005ம் ஆண்டில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்காக ரூ. 1 கோடி நிதி உதவியை கலைச்செல்வி கருணாலயா என்ற சமூக சேவை நிறுவனத்திடம் வழங்கியது.

இதையறிந்த நெட்டுக்குப்பம் மகளிர் மீனவர் கூட்டுறவு சங்கத் தலைவி சிவகாமி தங்கள் பகுதி மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அவர்களுக்கு உதவ அந்த தொண்டு நிறுவனம் முன் வந்தது.

இதையடுத்து 10 குழுக்களை அமைத்தார் சிவகாமி. ஒவ்வொரு குழுவுக்கும் தனித் தனி வங்கிக் கணக்குகளை துவக்கினார்

தொண்டு நிறுவனத்திடம் இருந்து குழுவுக்கு ரூ. 50,000 பெற்று வங்கிக் கணக்கில் செலுத்தினார். ஆனால், அந்தப் பணத்தை அவரே எடுத்துக் கொண்டார்.

மேலும் ஒவ்வொரு குழுவும் மாதம் ரூ. 2000 வீதம் 33 மாதங்கள் செலுத்தினால் நிவாரணப் பணம் இரட்டிப்பாகும் என்று சிவகாமி கூற அதை நம்பிய நூற்றுக்கணக்கான மீனவப் பெண்கள் வங்கிக் கணக்கில் பணத்தைக் கட்டியுள்ளனர். ஆனால், அவர்களது செக் புக்கில் கையெழுத்து வாங்கி அதை தன் வசம் வைத்துக் கொண்டார்.

இதற்கிடையே சிவகாமி, தனது தம்பி ராம்குமாரை ஒருங்கிணைப்பாளராகவும், தோழி வள்ளி என்பவரை செயலாளராகவும் கொண்டு 'கலங்கரை விளக்கம்' என்ற சமூக சேவை அமைப்பைத் தொடங்கினார். மீனவப் பெண்களின் வங்கி கணக்கில் இருந்த பணத்தை எல்லாம் 'கலங்கரை விளக்கம்' அமைப்பின் வங்கி கணக்கிற்கு மாற்றினார்.

இந் நிலையில் காஞ்சனா என்ற பெண் தனது வங்கி கணக்கை சரிபார்த்த போது அதில் பணம் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து மற்ற பெண்களும் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து சிவகாமியை சந்தித்தனர்.

ஒரு சில மாதத்தில் பணம் வந்து விடும் என்று கூறிய சிவகாமி தலைமறைவாகிவிட்டார்.

இதையடுத்து நெட்டுக்குப்பத்தைச் சேர்ந்த 300 பெண்கள் புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட்டிடம் புகார் கொடுத்தனர்.

இது குறித்து மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் நவநீதகிருஷ்ணன் தலைமையிலான டீம் விசாரணை நடத்தியது. அதில் அவர் நிதியை சுருட்டியது உறுதியானது.

இதையடுத்து சென்னை அருகே பதுங்கியிருந்த சிவகாமியை போலீசார் கைது செய்தனர். சிவகாமியை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் காவலில் சிறையில் அடைத்தனர்.

சிவகாமியின் மோசடிக்கு உடந்தையாக இருந்த வள்ளி, ராம்குமார், புனிதா ஆகிய 3 பேரையும் தேடி வருகின்றனர்.

இன்னொரு மெகா மோசடி:

அதே போல அம்பத்தூரில் ஸ்ரீவாரி கேப்பிட்டல்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வந்த நாகராஜன், சுசீந்திரன் ஆகியோர் முதலீடுகளை ரூ. 1 லட்சம் கட்டினால் மாதம் ரூ. 10,000 வீதம் 24 மாதங்களுக்கு வழங்கப்படும் என்று கவர அறிவிப்பு வெளியிட்டனர்.

இதை நம்பி ஏராளமானோர் ரூ. 1 லட்சம் முதல் 5 லட்சம் வரை முதலீடு செய்தனர். ஹரியானாவைச் சேர்ந்த ஜக்பீர் சிங் என்பவரும் ரூ. 1 லட்சம் முதலீடு செய்தார். 1 மாதம் மட்டும் ரூ. 10,000 கொடுத்தனர். பின்னர் பணம் கொடுக்கவில்லை.

நிறுவனமும் மூடப்பட்டுவிட்டது. இது குறித்து ஜக்பீர் சிங் போலீசில் புகார் செய்தார்.

இதையடுத்து நாகராஜனை போலீசார் கைது செய்தனர். பங்குதாரர் சுசீந்திரன் தலைமறைவாகிவிட்டார். அவரை தேடி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+