பீடி, சிகரெட் கட்டுப்பாடு- கைதிகள் பெரும் பாடு!

ரேஷன் முறையிலாவது பீடி, சிகரெட் தருமாறு கைதிகள் கோரி வருகின்றனராம்.
சமீபத்தில் தமிழகம் முழுவதும் உள்ள மத்திய சிறைச்சாலைகளில் சமீபத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தி பல்வேறு முறைகேடுகளை கண்டுபிடித்தனர். கைதிகளுக்கு சட்டவிரோதமாக பீடி, சிகரெட்டுகள் மற்றும் கஞ்சா போன்ற போதை பொருட்களை அதிகாரிகள் சப்ளை செய்வது கண்டறியப்பட்டது.
சென்னை புழல் சிறையில் இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபட்ட சிறை டாக்டர் உள்பட 5 அதிகாரிகள் சிக்கினார்கள். இதனால் தற்போது தமிழகத்தில் உள்ள மத்திய ஜெயில்களில் பீடி, சிகரெட் போன்ற பொருட்கள் சப்ளை செய்வதை அதிகாரிகள் நிறுத்திவிட்டனர்.
இதனால் பீடி, சிகரெட் புகைக்கும் கைதிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனராம். தம் அடிக்க முடியாமல் அவஸ்தைப்படும் அவர்கள் பீடி, சிகரெட் தருமாறு கூறி போராட்டங்களையும் நடத்தி வருகின்றனராம். உண்ணாவிரத போராட்டமும் நடத்துகிறார்கள்.
நேற்று சென்னை புழல் சிறையில் பீடி, சிகரெட் கேட்டு 600 கைதிகள் சாப்பிட மறுத்து போராட்டம் நடத்தினார்கள். பாளையங்கோட்டை சிறையிலும் இதுபோன்ற போராட்டத்தில் கைதிகள் ஈடுபட்டனர்.
எங்களுக்கு பாக்கெட் பாக்கெட்டாக, கட்டுக் கட்டாக தர வேண்டாம். ஒரு நாளைக்கு நாலு சிகரெட், பீடி கூடவா தரக் கூடாது என்று உரிமையோடு கேட்டு வருகிறார்களாம்.
இப்படி அழாத குறையாக சிகரெட், பீடி கேட்டுக் கெஞ்சும் 'குழந்தைகளுக்கு' சிறை அதிகாரிகள் ரகசியமாக பீடி, சிகரெட்டை வரவழைத்துக் கொடுப்பதாகவும் தெரிகிறது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications