18 பெண்களை கற்பழித்து கொலை செய்த ஆசிரியர்! -சயனைட்' கொடுத்து கொன்ற பயங்கரம்!!

கர்நாடக மாநிலம் மங்களூரைச் சேர்ந்த அனிதா (22) கடந்த ஜூன் மாதம் காணாமல் போனார். அவரைக் கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
காணாமல் போன அனிதாவின் செல்போனில் இருந்து சென்ற தொலைபேசி அழைப்புகள் குறித்து போலீசார் ஆய்வு செய்தபோது, கர்நாடகத்தில் ஏற்கனவே காணாமல் போயிருந்த சில பெண்களுக்கு அதிலிருந்து அழைப்புகள் சென்றது தெரியவந்தது.
மேலும் அனிதா மற்றும் அந்தப் அந்த பெண்களின் செல்போன்களை ஒரு நபர் தொடர்பு கொண்டிருந்ததும் தெரியவந்தது.
இதை வைத்து மோகன்குமார் என்பவனை போலீசார் மடக்கினர். அவன் தந்த வாக்குமூலம் போலீசாரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
கடந்த 5 ஆண்டுகளில் 18 பெண்களை கற்பழித்து கொலை செய்துள்ளதாக அவர் தெரிவித்தான்.
30 வயதுக்கு மேல் ஆன திருமணம் ஆகாத படிப்பறிவு குறைந்த பெண்களை அணுகி வரதட்சணை இல்லாமல் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி, மயக்கி, வெளியூர்களுக்கு அழைத்துச் சென்று, ஹோட்டல்களில் தங்க வைத்து இவன் கற்பழித்துள்ளான்.
பின்னர் செக்ஸ் வைத்துக் கொண்டதால், திருமணத்திற்கு முன் கர்ப்பம் ஆகிவிடக்கூடாது என்று கூறி கருத்தடை மாத்திரைகளை தந்துள்ளான்.
ஆனால், அவன் தந்தது கருத்தடை மாத்திரைகள் அல்ல. அவை சயனைட் மாத்திரைகள். இதனால் அதை உண்ட பெண்கள் அனைவருமே அடுத்த சில நிமிடங்களிலேயே இறந்துள்ளனர்.
மோகன்குமார், 23 ஆண்டுகளாக பல இடங்களில் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்துள்ளான். முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இந்த ஏமாற்றல்- கற்பழிப்பு- கொலைகளில் ஈடுபட்டு வந்துள்ளான்.
மோகன்குமாரிடம் இருந்து 8 சயனைடு பொட்டலங்கள், 4 செல்போன்கள் மற்றும் கொலை செய்யப்பட்ட அனிதா உள்ளிட்ட பெண்களிடம் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications