சோனியாவுடன் சந்திப்பு-ஜெகன்மோகனுக்கு மந்திரி பதவி?
டெல்லி: ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டி இன்று சோனியா காந்தியை சந்தித்துப் பேசினார். அப்போது அவருக்கு கப்பல் போக்குவரத்துறை இணை அமைச்சர் பதவியை வழங்குவதாக சோனியா கூறினாராம். இதற்கு ஜெகன் மோகன் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மறைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டி எம்.பி., முதல்வர் பதவிக்காக காத்திருக்கிறார். ராஜசேகர ரெட்டி மறைந்தவுடனேயே ஜெகன்மோகனைத்தான் காங்கிரஸ் மேலிடம் முதல்வராக்கும் என அவரது ஆதரவாளர்கள் நினைத்திருந்தனர்.
ஆனால் திடீரென ரோசய்யாவை முதல்வராக்கி விட்டது காங்கிரஸ் மேலிடம். இதனால் அதிருப்தி அடைந்த ஜெகன் மோகன் ஆதரவாளர்கள் மாநிலம் முழுவதும் பெரும் போராட்டத்தில் குதித்தனர். இதில் சோனியா காந்தியின் பேனர்களையும் அவர்கள் எரித்ததால் காங்கிரஸ் தலைவர்கள் பெரும் அதிருப்தி அடைந்தனர்.
இந்த நிலையில் தற்போது டெல்லி வந்துள்ளார் ஜெகன்மோகன். நேற்று டெல்லி வந்த அவர் ஆந்திர மாநிலத்துக்கான காங்கிரஸ் பொறுப்பாளர் வீரப்ப மொய்லியை சந்தித்துப் பேசினார்.
ஆந்திர அரசியல் நிலவரம், தனது ஆரவாளர்களின் எதிர்பார்ப்பு ஆகியவை குறித்து ஜெகன் மோகன் மொய்லியிடம் ஆலோசித்ததாக தெரிகிறது.
கிட்டத்தட்ட அரை மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது. பின்னர் வெளியில் வந்த ஜெகன் மோகன் ரெட்டி காத்திருந்த செய்தியாளர்களிடம் பேசுகையில், சோனியா காந்தியை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன். அவர் நேரம் ஒதுக்கித் தந்தால் நிச்சயம் அவரை சந்திப்பேன் என்றார்.
இந்த நிலையில் இன்று காலை சோனியா காந்தியை ஜெகன் மோகன் ரெட்டி சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது ஜெகன் மோகனை மத்திய இணை அமைச்சராக்க விரும்புவதாக சோனியா கூறியுள்ளார். மேலும், கப்பல் போக்குவரத்துத் துறை பொறுப்பை அளிக்கவிருப்பதாகவும், விருப்பமா என்றும் கேட்டுள்ளார். இதற்கு ஜெகன் மோகன் ரெட்டி சம்மதம் தெரிவித்தார் என்றும் தெரிகிறது.
சந்திப்புக்குப் பின்னர் வெளியில் வந்த ஜெகன் மோகன் ரெட்டி செய்தியாளர்களிடம் பேசுகையில், சோனியா மேடத்தை நான் சந்தித்துப் பேசினேன். எல்லாவற்றையும் என்னிடம் விட்டு விடு, நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். பொருத்தமான நேரத்தில் பொருத்தமான முடிவு எடுக்கப்படும் என்றார்.
எனக்கு அவர் மீது முழு நம்பிக்கை உள்ளது. ஆந்திர மாநில அரசியல் குறித்து கேட்டறிந்து கொண்டார் என்றார்.
ஜெகன் மோகன் ரெட்டியுடன் வீரப்ப மொய்லி, ராஜசேகர ரெட்டியின் நெருங்கிய நண்பரான கே.வி.பி.ராமச்சந்திர ராவ் ஆகியோரும் சென்றனர்.
முன்னதாக, டெல்லிக்கு வருமாறு ஜெகன் மோகனை காங்கிரஸ் மேலிடம் அழைக்கவில்லையாம். மாறாக நிதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காகவே ஜெகன்மோகன் டெல்லி வந்துள்ளாராம். ராஜசேகர ரெட்டி மறைவுக்குப் பின்னர் அவர் டெல்லி வருவது இதுவே முதல் முறையாகும்.
நாங்கதான் இப்போ ஸ்டிராங் - நாயுடு
இதற்கிடையே, ஆந்திராவில் காங்கிரஸ் கட்சியில் கோஷ்டிப் பூசல் அதிகரித்து விட்டதால் விரைவில் ஆட்சி கவிழ்ந்து தேர்தல் வரும். அப்போது தெலுங்கு தேசம் பெரும் வெற்றி பெறும் என சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
இதுகுறித்து ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
ராஜசேகர ரெட்டி இருந்த போது ஆந்திர காங்கிரஸ் கட்டுக்கோப்பாக இருந்தது. அவர் தலை சிறந்த நிர்வாகி. அவர் மறைந்ததும் காங்கிரஸ் கட்சியில் முதல்வர் பதவியைப் பெற பல்வேறு தலைவர்கள் போட்டி போடுகின்றனர். இதனால் கோஷ்டி பூசல் அதிகரித்து விட்டது.
இதனால் ஆந்திர சட்ட சபைக்கு மீண்டும் தேர்தல் வரும் என்று எதிர்பார்க்கிறோம். இதனால் தெலுங்கு தேசம் தொண்டர்கள் தேர்தலை சந்திக்க தயாராக இருக்க வேண்டும். தற்போது ஆந்திராவில் பலம் வாய்ந்த ஒரே கட்சி தெலுங்கு தேசம் தான் என்றார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications