செங்கோட்டை-275 கேன் எரிசாராயம் சிக்கியது
செங்கோட்டை: நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே கேரளாவுக்குக் கடத்த முயன்ற 275 கேன் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை மாவட்டம் புளியரை அருகே கேரள மாநில எல்லையில், தமிழக அரசின் சோதனைச் சாவடி உள்ளது. இந்தப் பகுதி வழியாக இன்று பெருமளவில் எரிசாராயம் கடத்தப்படவிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் வந்தது.
இதையடுத்து இன்று அதிகாலை போலீஸார் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஈஷர் வேன் ஒன்று கேரளாவை நோக்கி வேகமாக வந்தது.
அந்த வேனைத் தடுத்து நிறுத்தி போலீஸார் சோதனையிட்டபோது, தலா 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 102 வேன்களில் எரிசாராயம் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அதை போலீஸார் பறிமுதல் செய்தனர். வேனில் இருந்த 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஆலங்குளம் அருகே உள்ள கழுநீர்குளம் என்ற இடத்தில் பெங்களூரிலிரு்நது கடத்தி வரப்படும் எரிசாராயத்தை இருப்பு வைத்து அங்கிருந்து பிரித்து கேரளாவுக்கு கடத்தி வருவது தெரிய வந்தது.
இதையடுத்து கழுநீர்குளம் விரைந்த போலீஸார் அங்கு சோதனை நடத்தி மேலும் 173 கேன் எரிசாராயத்தைப் பறிமுதல் செய்தனர்.












Click it and Unblock the Notifications