ஜெய்ராம் ரமேஷை கண்டித்து கருணாநிதி தலைமையில் மதுரையில் பொதுக் கூட்டம்

டெல்லியில் உள்ள கேரள லாபியின் சாமர்த்தியம் காரணமாக, ஜெய்ராம் ரமேஷ், கேரளாவின் புதிய அணை தொடர்பான ஆய்வுக்கு அனுமதி அளித்துள்ளார்.
இதையடுத்து 2 நாட்களுக்கு முன்பு ஆய்வையும் தொடங்கி விட்டது கேரளா. இதற்கு தடை விதிக்கக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்து விட்டது.
இதனால் தமிழக அரசு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது. இந்த விவகாரத்தில் பிரதமரோ, காங்கிரஸ் தலைவரோ தலையிடுவதாக தெரியவில்லை.
இந் நிலையில், திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
முல்லைப் பெரியாறு பிரச்சனையில் மத்திய இணை அமைச்சர் ஒருவர் நடந்து கொண்ட விதத்தை கண்டித்து மதுரை மாநகரில் 1-11-2009 (ஞாயிற்றுக்கிழமை) அன்று முதல்வர் கருணாநிதி கலந்து கொள்ளும் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறும்.
மற்ற விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
தேர்தல் வெற்றி-சோனியாவுக்கு கருணாநிதி பாராட்டு:
இந் நிலையில் மகாராஷ்டிரா, ஹரியாணா, அருணாசல் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் வென்றுள்ளதையடுத்து அக் கட்சியின் தலைவர் சோனியாவுக்கு முதல்வர் கருணாநிதி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
மத்தியில் சிறப்பாக காங்கிரஸ் ஆட்சி புரிந்ததற்கு கிடைத்த பரிசுதான் இந்த தேர்தல் வெற்றி என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications