ஜீ குழுமம்.. ஒரு சைலன்ட் செட்டில்மெண்ட்!

Subscribe to Oneindia Tamil

Subash Chandra
மும்பை: சகோதர சண்டையில் நிறுவனத்தின் பெயரைத் தெருவுக்கு இழுக்காமல், அமைதியாகவும் சுமுகமாகவும் பிரிவினைக்கு ஏற்பாடு செய்துள்ளனர் ஜீ குழுமத்தினர். சகோதரர்களால் நடத்தப்படும் மற்ற நிறுவனங்களுக்கு ஒரு முன்னோடியாக இந்த ஒப்பந்தத்தை உருவாக்கியுள்ளனர்.

மீடியா உலகின் முதல் நிலை நிறுவனங்களில் ஒன்றான ஜீயின் தலைவராக சுபாஷ் சந்திரா உள்ளார். இவருக்கு மூன்று சகோதரர்கள். லஷ்மி, ஜவஹர் மற்றும் அஷோக் ஆகிய இம்மூவரும் ஜீ - எஸ்ஸெல் குழுமத்தின் பங்குதாரர்களாக உள்ளனர்.

எதிர்காலத்தில் சகோதரர்களுக்குள் பிரிவினை என்று வந்தாலும், ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காக, ஒற்றுமையுடன் இருக்கும்போதே ஒரு ஒப்பந்தத்தை தயார் செய்துள்ளனர் இந்த சகோதரர்கள்.

இதுகுறித்து சுபாஷ் சந்திர கூறுகையில், "இப்போது நாங்கள் ஒன்றாக இருந்தாலும், நிச்சயம் பிரியும் நாள் ஒன்று வரும். அன்றைக்கு யாருக்கும் மனஸ்தாபம் இல்லாமல் சுமுகமான முறையில் பாகப் பிரிவினை நிகழவேண்டும். ஒருவரையொருவர் விரோதியாக பாவித்து திட்டிக் கொள்ளக் கூடாது. எனவேதான் இந்த பாகப்பிரிவினை ஏற்பாடு.

பத்ததாண்டுகளுக்கு முன்பே இதற்கு நாங்கள் தயாராகிவிட்டோம். சகோதரர்களின் நலன் மற்றும் சிறுபான்மைப் பங்குதாரர்களின் நலன் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு இந்த ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டது. நிறுவன உரிமை மற்றும் இருக்கும் சொத்துக்கள் அனைத்திலுமே நால்வருக்கு சமமான பங்கு என ஒப்பந்தம் செய்துள்ளோம்..." என்றார்.

ஆனால் மற்ற மூன்று சகோதரர்களும் மூத்த சகோதரர் சுபாஷூக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளார்களாம். தங்களுக்கு சமமான பங்கு தரப்படக் கூடாது என்றும், மூத்தவர் மற்றும் தொழில் நிறுவனத்தை உருவாக்கி வளர்த்தவர் என்ற வகையில் சுபாஷுக்கு இன்னும் அதிக பங்கு சேர வேண்டும் என்றும் அன்புக் கட்டளை விடுத்துள்ளார்களாம்.

அட!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+