சென்னையில் 12 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை: சென்னையி்ல் 12 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து நகர் முழுவதும் தீவிர கண்காணிப்பும், பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. வாகன சோதனையும் முடுக்கி விடப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று ஒரே நாளில் 12 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. தனியார் தொலைக்காட்சி நிலையம் மற்றும் ஆங்கில பத்திரிகை அலுவலகம், அடையார் போலீஸ் நிலையம் ஆகியவற்றுக்கு மிரட்டல் கடிதங்கள் வந்தன. அந்த கடிதத்தில் அனுப்புனர் முகவரி எதுவும் இல்லை. அடையாறு பகுதியில் இருந்து இந்த கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளது.
மிரட்டல் கடிதங்கள் அனைத்தும் ஒன்றுபோல இருந்தது. அந்தக் கடிதங்களில், சென்னை விமான நிலையம், சென்டிரல்-எழும்பூர் ரயில் நிலையங்கள், கோயம்பேடு பஸ் நிலையம், அமெரிக்க தூதரகம் உள்ளிட்ட 12 இடங்களில் குண்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
தீவிரவாதிகள் குறிப்பிட்ட இந்த இடங்களை தகர்க்க திட்டமிட்டுள்ளனர். கோட்டூர்புரத்திலும், கொடுங்கையூரிலும் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளனர். முடிந்தால் அவர்களை பிடித்து பாருங்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மிரட்டல் கடிதங்கள் குறித்து விசாரணை தொடங்கியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையம் மற்றும் எழும்பூர்- சென்டிரல் ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
பலத்த சோதனைக்கு பின்னரே பயணிகள் அனுமதிக்கப்படுகிறார்கள். பயணிகள் கொண்டு வரும் உடமைகள் மெட்டல் டிடெக்டர் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறது.
விமான நிலையத்தில் அனைத்து பகுதிகளிலும் மோப்ப நாய் உதவியுடன் அங்குலம் அங்குலமாக வெடிகுண்டு சோதனை நடத்தப்படுகிறது.
மிரட்டல் கடிதம் வந்த அடையாறில் உள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திலும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினார்கள்.
3 மிரட்டல் கடிதங்களும் தீவிரவாதிகள் பெயரில் அனுப்பப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதனை அனுப்பியது யார்? என்று தெரியவில்லை.
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications