சத்யம் மோசடி... விசாரிக்க மொரீஷியஸ் போனது சிபிஐ!
Subscribe to Oneindia Tamil

சத்யம் நிறுவனர் ராமலிங்க ராஜுவின் இந்த மோசடியின் முக்கிய கூட்டாளிகள், அவர் போலியாக காட்டிய நிறுவனங்களின் முகவரிகள் மொரீஷியஸை மையப்படுத்தியே உள்ளதாக விசாரணையில் தெரிய வந்தது.
இதுதவிர இன்னும் 5 நாடுகளிலும் ராமலிங்கராஜுவின் மோசடிக்கு உடந்தையாக இருந்தவர்கள் பரவியிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
எனவே சிபிஐ டிஐஜி லட்சுமிநாராயணா மற்றும் எஸ்பி கிருஷ்ணா உள்ளிட்ட அதிகாரிகள் குழு முதல்கட்டமாக மொரீஷியஸ் விரைந்துள்ளது.
இங்கு விசாரணை முடிந்தபிறகு பிரிட்டன், அமெரிக்கா, சிங்கப்பூர், பெல்ஜியம் மற்றும் பிரிட்டிஷ் வர்ஜினி ஐலண்ட்ஸ் போன்ற நாடுகளுக்கும் சென்று விசாரிக்க உள்ளனர்.
ராஜுவுக்கு லை டிடெக்டர் சோதனை...
இதற்கிடையே வரும் அக்டோபர் 26-ம் தேதி சத்யம் ராமலிங்கராஜுவுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த ஹைதராபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications