பெண் வக்கீலை ஏமாற்றி திருமணம் செய்த போலி வக்கீல்!

சென்னை கொத்தவால்சாவடியைச் சேர்ந்த உஷா மோசஸ் (39) ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கும் திருத்தணியைச் சேர்ந்த ஸ்ரீராமுலு (33) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. ஸ்ரீராமுலு தன்னை வழக்கறிஞர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். இதையடுத்து இருவருக்கும் திருமணம் நடந்தது.
இந் நிலையில் உஷா சமீபத்தில் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் ஒரு புகார் மனு அளித்தார். அதில்,
எனக்கும் ஸ்ரீராமுலுவுக்கும் 2005ம் ஆண்டு கிருஸ்துவ முறைப்படி திருமணம் நடந்தது. திருமணத்திற்கு முன் அவர் வழக்கறிஞராக இருப்பதாகக் கூறினார்.
ஆனால், அவர் ஒரு போலி வக்கீல் என்பது தெரிய வந்தது. இது குறித்து நான் கேள்வி கேட்டதையடுத்து வீட்டுக்கு வருவதையே தவிர்த்துவிட்டார்.
மேலும் திருத்தணியை சேர்ந்த அவரது உறவுப் பெண் ஒருவரை 2வது திருமணம் செய்யவும் முயற்சி செய்தார்.
இது குறித்து போலீசில் நான் புகார் தந்ததால் அவரை அழைத்து விசாரித்தனர்.
அப்போது ஸ்ரீராமுலு, தான் ஒரு போலி வக்கீல் என்று ஒப்புக் கொண்டார். மேலும் 2வது திருமணம் செய்ய மாட்டேன் என்று எழுதிக் கொடுத்தார்.
இந் நிலையில் சில வாரங்களுக்கு முன் தனது அக்காள் மகளான சரிதாவை இந்து முறைப்படி 2வது திருமணம் செய்து கொண்டுள்ளார். இதுபற்றி நான் கேட்டதற்கு என்னிடம் வரதட்சணை கேட்டும், கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி வருகிறார். அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார் உஷா.
இது குறித்து விசாரித்த கொத்தவால்சாவடி போலீசார் ஸ்ரீராமுலுவை இன்று கைது செய்தனர்.
அவர் மீது திருமண மோசடி, பெண் வன் கொடுமை உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications