கல்லூரி மாணவி கடத்தி கற்பழிப்பு-2 மாணவர்கள் கைது

Subscribe to Oneindia Tamil

கரூர்: கரூர் அருகே அரசுக் கல்லூரி மாணவியை கடத்தி மானபங்கம் செய்த கல்லூரி மாணவர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.

பரிசோதனைக்காக மாணவி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

கரூர் மாவட்டம், வடக்கு காந்தி கிராமம் முத்துநகரைச் சேர்ந்த வீரமணி மகள் மல்லிகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), வயது 19.

இவர் கரூர் அரசு கல்லூரியில், தாவரவியல் முதலாண்டு படித்து வருகிறார்.

இவர் கடந்த 20ம் தேதி கரூர் அரசுக் கலைக் கல்லூரி புவியியல் மூன்றாமாண்டு மாணவர்கள் யுவராஜ் (22), ரகுமான் (22), சதீஷ் (22) மற்றும் ஆங்கில இலக்கிய மூன்றாண்டு மாணவன் ம.சதீஷ் (23) ஆகியோர், மாருதி ஆம்னி வேனில் தன்னை செல்லாண்டிப்பட்டி தென்னந் தோப்பிற்கு கடத்திச் சென்றதாகவும்,

அதில் யுவராஜ் தன்னை கற்பழித்ததாகவும் பசுபதிபாளயம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந் நிலையில் மல்லிகாவின் தந்தை மற்றும் நான்கு பேர், கரூர் கலைக் கல்லூரிக்குச் சென்று, யுவராஜ் மற்றும் ரகுமானையும் தாக்கினர்.

இந் நிலையில் கல்லூரி நிர்வாகத்திடமிருந்து வந்த தகவலை அடுத்து, மாணவர்கள் சதீஷ் மற்றும் ரகுமானை போலீசார் கைது செய்தனர்.

மாணவி மல்லிகா, கரூர் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தலைமறைவான யுவராஜ் மற்றும் மற்றொரு சதீஷை போலீசார் தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+