சென்னையில் சொத்து - விதி மீறலில் ஈடுபட்டதாக பி.டி.தினகரன் மீது புதிய புகார்

சம்பந்தப்பட்ட கட்டடம் சென்னை ஷெனாய் நகர் கிழக்கு பூங்காச் சாலையில் உள்ளது. ஐந்து அடுக்கு மாடிக் கட்டடம் இது. இதை கடந்த 1990ம் ஆண்டு நீதிபதி தினகரனும், அவரது மனைவியும் சேர்ந்து வாங்கியுள்ளனர்.
இந்த விதி மீறல் குறித்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனுக்கு நீதித்துறை மீதான நம்பகத்தன்மைக்கான அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் வைகை அனுப்பி வைத்துள்ளார்.
அதில், நான்கு மாடிகளை மட்டுமே கட்ட சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அனுமதி அளித்திருந்தது. ஆனால் கூடுதலாக ஐந்தாவது மாடியைக் கட்டியுள்ளனர்.
இந்த ஐந்தாவது மாடி முழுக்க முழுக்க விதி மீறி கட்டப்பட்டதாகும். ஆனால் இதை அப்படியே மறைத்து விட்ட பெருநகர வளர்ச்சிக் குழுமம், கட்டடத்திற்கு கம்ப்ளீஷன் சர்டிபிகேட் கொடுத்துள்ளது.
மேலும் முத்திரைத் தாள் மதிப்பையும் குறைத்துக் காட்டியுள்ளார் நீதிபதி பி.டி.தினகரன்.
இந்த இடத்தை தினகரன் தம்பதியினர் ரூ. 5.5 லட்சத்திற்கு (3236 சதுர அடி) வாங்கியதாக சார்பதிவாளர் அலுவக வில்லங்க சான்றிதழ் தெரிவிக்கிறது. பின்னர் 2001ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி, இந்த சொத்தில் தனது பங்கை வினோதினியின் பெயரில் நீதிபதி தினகரன் மாற்றியுள்ளார்.
2002ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி 2,688 சதுர அடி பரப்பளவை 2வது பர்ச்சேஸ் என்ற முறையில் வாங்கியுள்ளார். அதற்காக ரூ. 1.49 லட்சம் முத்திரைத் தாள் கட்டணத்தைக் கட்டியுள்ளார்.
ஆனால், அரசின் வழிகாட்டு மதிப்பீட்டின்படி, ஒரு சதுர அடியின் மதிப்பு ரூ. 1,069 ஆகும். அப்படிப் பார்த்தால் பத்திரப் பதிவுக் கட்டணம் ரூ. 28.73 லட்சம் வருகிறது. இதன் மூலம், ரூ. 27.24 லட்சம் குறைத்து கட்டப்பட்டு மோசடி செய்யப்பட்டுள்ளது.
மேலும் தினகரன் தம்பதியினரும், தினகரனின் மாமியாரும் அண்ணாநகரில் ரூ. 90.50 லட்சம் மதிப்பிலான இன்னொரு சொத்தை வாங்கியுள்ளனர்.
இதேபோல ஐடி காரிடார் சாலையில், சோழிங்கநல்லூரில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்குச் சொந்தமான இடங்களை வினோதினி மற்றும் தினகரனின் இரு மகள்களான அமுதா, அம்ரிதா ஆகியோரின் பெயரில் வாங்கியுள்ளனர்.
முதலில் தனது மாமானார் ஜேம்ஸ் குப்புசாமி, மாமியார் பரிபூரணம் ஆகியோரது பெயர்களில் இந்த இடங்களுக்கு விண்ணப்பித்துள்ளனர். பின்னர் தனது மகள்கள் பெயரில் இவற்றை வாங்கியுள்ளார் தினகரன்.
தினகரனின் மாமனாரும், மாமியாரும் தாங்கள் கொடுத்த விண்ணப்பத்தில், தாங்கள் வருமான வரி கட்டுவதில்லை என்றும், வருடாந்திர வருமானம் முறையே ரூ. 55,668, ரூ 49,200 என்றும் காட்டியுள்ளனர். இதை வைத்துப் பார்க்கும்போது இருவரும் உயர் வருவாய் பிரிவினருக்கான நிலங்களை வாங்கத் தகுதி அற்றவர்களாகின்றனர்.
இதுதவிர சரளா, தினகரனின் சகோதரி விமலா, மைத்துனர் வில்லியம்ஸ் ஆகியோர் ஒன்றாக இட ஒதுக்கீடு கோரி விண்ணப்பித்துள்ளனர். பின்னர் மூன்று பேரும் ஒரே நாளில் தங்களது விண்ணப்பங்களைத் திரும்பப் பெற்றுள்ளனர்.
இறுதியாக, ஜேம்ஸ் குப்புசாமி, பரிபூரணம், வினோதினி ஆகியோரது பெயர்களில் முறையே ரூ. 6.9 லட்சம், ரூ. 5.15 லட்சம், ரூ. 5.15 லட்சம் மதிப்பீட்டிலான உயர் வருவாய் பிரிவினருக்கான நிலங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது முற்றிலும் விலை குறைத்துக் காட்டப்பட்டுள்ளது.
இந்த விற்பனை முடிந்த அடுத்த 2 நாட்களிலேயே இந்த சொத்துக்கள், தினகரனின் மகள்கள் பெயருக்கு மாற்றப்பட்டுள்ளன. அந்த சமயத்தில் சொத்தின் மதிப்பு ரூ. 8.59 லட்சமாக காட்டப்பட்டுள்ளது. 2 நாட்களில் நிலத்தின் மதிப்பு ரூ. 3.5 லட்சம் உயர்ந்துள்ளது. அதுதான் அந்த நிலத்தின் உண்மையான மதிப்பாகும்.
இதன் மூலம் தெரியவருவது என்னவென்றால், தினகரனின் மாமானார், மாமியார் பெயர்களில் சொத்துக்களை வாங்கி அவற்றை தனது மகள்களின் பெயருக்கு மாற்றியுள்ளார். அதேபோல அண்ணா நகர் இடத்தையும் முதலில் பரிபூரணம் பெயரில் வாங்கி பின்னர் வினோதினி பெயருக்கு மாற்றியுள்ளனர்.
இந்த அனைத்து சொத்துக்களின் மதிப்பும் பல கோடியாகும். இது தீவிரமாக விசாரிக்கப்பட வேண்டியதாகும் என்று கூறியுள்ளார் வைகை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications