தலிபான் தலைவர் ஹக்கிமூல்லாவின் ஊரைப் பிடித்தது பாக். ராணுவம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவத்திற்கு முக்கிய வெற்றி கிடைத்துள்ளது. தெற்கு வசிரிஸ்தான் பிராந்தியத்தி்ல் அது தொடங்கியுள்ள ராணுவ நடவடிக்கையின் முக்கிய வெற்றியாக, தலிபான் தலைவர் ஹக்கிமூல்லாவின் சொந்த ஊரான கொக்காய் நகரம் ராணுவத்தின் வசம் வந்துள்ளது.
கடந்த எட்டு நாள் தாக்குதலின் விளைவாக கொக்காய் நகரைப் பிடித்துள்ளது பாகிஸ்தான் படை. தரை மற்றும் வான் வழித் தாக்குதலின் மூலம் தலிபான்களின் முக்கிய நகரான கொக்காயைப் பிடித்துள்ளது பாகிஸ்தான்.
கொக்காய் நகருக்கு அருகில்தான் தலிபான்களின் மிக முக்கிய நகரான சரரோகா உள்ளது. எனவே கொக்காய் நகரைப் பிடித்துள்ளது பாகிஸ்தான் ராணுவத்திற்குப் பெரிய வெற்றி என்று கருதப்படுகிறது. கொக்காய் நகரில் உள்ள பல வீடுகளை தலிபான்கள் பங்கர்கள் போல மாற்றி வைத்துள்ளனர். அங்கு தற்கொலைப் படையினருக்கான பயிற்சி முகாம் ஒன்றும் இயங்கி வந்தது.
தற்போது தலிபான்கள் சிதறி ஓடிக் கொண்டிருப்பதாகவும், பலர் தலிபான் அமைப்பை விட்டே விலகிப் போய்க் கொண்டிருப்பதாகவும், ராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மறுபக்கம் ஆப்கானிஸ்தானில் இருந்தபடி தொடர்ந்து அமெரிக்கா தனது ஏவுகணைத் தாக்குதலை நடத்தி வருகிறது. நேற்று நடந்த தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications