எஸ்எல்ஆர் விகிதம் 25% உயர்வு!
மும்பை: ரிசர்வ் வங்கியின் புதிய கடன் கொள்கையின்படி எஸ்எல்ஆர் எனப்படும் கட்டாய ரொக்க இருப்பு விகிதம் (statutory liquidity ratio) 1 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதாவது 24 சதவீதத்திலிருந்து 25 சதவீகிதமாக, 100 புள்ளிகள் உயர்த்தப்பட்டுள்ளது.
எஸ்எல்ஆர் விகிதம் என்பது ஒவ்வொரு வங்கியும் தங்களது வைப்புத் தொகையில் ஒரு பகுதியை அரசின் கடன் பத்திரங்களில் கட்டாயமாகச் செய்யும் முதலீடாகும். இதன் மூலம் வெளிச் சந்தையில் புழக்கத்தில் உள்ள உபரி பணத்தை மீண்டும் ரிசர்வ் வங்கிக்கே திருப்பி விட முடியும். நாட்டில் அனாவசிய பணப்புழக்கம் குறையும்.
இந்த முறை 1 சதவிகிதம் எஸ்எல்ஆர் உயர்த்தப்பட்டதால், வெளிச் சந்தையில் உள்ள ரூ. 35,000 கோடி ரிசர்வ் வங்கிக்கே திருப்பப்படும். இதனால் சந்தையில் கூடுதலாக உள்ள பணம் உரிஞ்சப்படும். லேசாக உயர்ந்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கையை ரிசர்வ் வங்கி எடுத்துள்ளது.
சிஆர்ஆர், ரெபோ ரேட், ரிவர்ஸ் ரேட்டில் மாறுதல் இல்லை:
அதே நேரத்தில் ரிசவ் வங்கியின் முக்கிய பணவியல் ஆயுதங்களான ரொக்க இருப்பு விகிதம், சிஆர்ஆர், ரெபோ ரேட் மற்றும் ரிவர்ஸ் ரேட் போன்றவற்றில் எந்த மாறுதலும் செய்யப்படவில்லை என அறிவித்துள்ளது.
இப்போதைய விகிதங்கள்: சிஆர்ஆர் - 5 சதவீதம், ரெபோ ரேட் (வங்கிகளுக்கு அளிக்கப்படும் குறுகிய கால கடனுக்கான வட்டி) 4.75 சதவீதம், ரிவர்ஸ் ரேட் (வங்கி அமைப்பில் உள்ள உபரி நிதியை உள்ளிழுக்க ரிசர்வ் வங்கி, வணிக வங்கிகளிடம் வாங்கும் கடனுக்கான விகிதம்) 3.25 சதவீதம்.
மேலும், இந்த ஆண்டுக்கான பணவீக்க இலக்கை 5 சதவீதம் என்பதிலிருந்து 6.5 சதவீதமாக உயர்த்தியிருக்கிறது ரிசர்வ் வங்கி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications