அண்டர்வேர்ல்டு முதலீட்டாளர்களை இந்தியாவால் பிடிக்க முடியாதது ஏன்?

ராஜ் ராஜ்ரத்னம் சர்வ பலம் மிக்க ஒரு செல்வந்தராகத் திகழ்ந்தவர். இலங்கையின் பங்குச் சந்தையையே தனது கட்டுக்குள் வைத்திருந்தவர்.
இன்டெல், ஐ.பி.எம், மெக்கின்ஸி ஆகிய பெரும்புகழ் கொண்ட நிறுவன பங்குகளை சுமார் 20 மில்லியன் டாலர்கள் வரையில் (சுமார் 92 கோடி ரூபாய்), 'இன்ஸைடர் டிரேடிங்' முறையில் வாங்கி 100 மில்லியன் டாலர்கள் வரை தவறாக பங்குச் சந்தையில் லாபம் பார்த்தார் ராஜ்ரத்னம் என்று எஃப்.பி.ஐ. தனது குற்றப் பத்திரிகையில் கூறியுள்ளது.
அது என்ன இன்ஸைடர் டிரேடிங்?:
குறிப்பிட்ட நிறுவனத்தின் அதிகாரிகளை கையில் போட்டுக் கொண்டு, நிறுவனத்தின் அடுத்தடுத்த நகர்வுகளைத் தெரிந்து வைத்துக் கொண்டு அதற்கேற்ப அந்த நிறுவனத்தின் பெருமளவு பங்குகளை வாங்கி, விலையேறியதும் விற்று பெரும் லாபம் பார்ப்பதுதான் இன்ஸைடர் டிரேடிங்.
இலங்கையின் பெருமளவு நிறுவனங்களின் பங்குகளை இப்படி ராஜ் ரத்தினம் வளைத்து பின்னர் நல்ல லாபத்துக்கு விற்றதாகவும் கூறப்படுகிறது.
இவர் மீதான முக்கிய குற்றச்சாட்டு விடுதலைப் புலிகளுக்கு இவர் நிதியுதவி அளித்தார் என்பதுதான். ஆனால் இவர் நேரடியாக எந்த பண உதவியும் புலிகளுக்கு அளிக்கவில்லை. மாறாக டிஆர்ஓ எனப்படும் தமிழர் புனர்வாழ்வு கழகத்துக்குதான் வேறு பெயரில் நன்கொடை வழங்கினார்.
மற்றபடி ராஜ் ராஜரத்னம் மீது வேறு மோசமான குற்றச்சாட்டுகள் ஏதுமில்லை. தமிழ் ஆர்வலர் என்ற வகையில் தமிழர் அமைப்புகளுக்கு உதவியதாக அவர் தரப்பில் கூறப்படுகிறது.
இருந்தாலும், இலங்கை அரசின் நெருக்குதலுக்கு பணிந்து அல்லது அவர்களுக்கு உதவும் நோக்கில் ராஜ் ரத்னம் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ராஜ் ரத்தினமாவது ஒரு பெரும் தொழிலதிபர். பல நிறுவனங்களை நடத்துபவர். தமிழுணர்வாளர் என்ற வகையில் தமிழ் அமைப்புகளுக்கு உதவி செய்தவர். இலங்கையில் உள்ள சிங்கள அரசியல்வாதிகளுக்கும் கூட பல வழிகளில் உதவியிருக்கிறார்.
ஆனால், இந்தியாவில் பல தீவிரவாத வன்முறை வெறியாட்டங்களுக்கு வெளிப்படையாகவே நிதி உதவி செய்த தாவூத் இப்ராகிம் போன்றவர்களை இந்திய அரசால் நெருங்கக் கூட முடியவில்லை. சர்வதேச நெருக்குதலை தீவிரப்படுத்தி அவர்களைக் கைது செய்வதல்லாம் இந்தியாவால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத சமாச்சாரமாகவே உள்ளது.
இந்திய பங்குச் சந்தையில் இன்ஸைடர் டிரேடிங் என்பது ரொம்ப சர்வசாதாரணமாக நடப்பதாக கூறப்படுகிறது. இதில் வெளிநாட்டு சக்திகள் மற்றும் தீவிரவாத அமைப்புகளின் கையும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
அதனால்தான் பங்குச் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் தீவிரவாத சக்திகள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆனால் இதுபோன்ற எச்சரிக்கைகள் விடுக்கப்படுவது இது முதல் முறையல்ல... அதைத் தொடர்ந்து எந்த நடவடிக்கையும் இல்லாமல் போவதும் இந்தியர்களுக்குப் புதிதல்ல.
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications