ரூ. 13 லட்சம் வைர நகை திருடப்பட்டதாக பொய்ப் புகார் - வாலிபர் கைது
சென்னை: பைக்கில் சென்றபோது தான் வைத்திருந்த ரூ. 13 லட்சம் மதிப்புள்ள தங்க, வைர நகைகளை திருடிக் கொண்டு போய் விட்டதாக பொய்யான புகாரைக் கொடடுத்த வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.
நகைகள் அடங்கிய பையை அவர் தொலைத்து விட்டு, அதிலிருந்து தப்புவதற்காக கொள்ளையடிக்கப்பட்டதாக அந்த நபர் பொய்யான புகாரைக் கொடுத்தது விசாரணையில் தெரிய வந்தது.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஒரு நகை செய்யும் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக இருப்பவர் நிலேஷ் சுரானா.
அந்த நிறுவனத்தில் இருந்து 13 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம், வைர நகைகளை கத்திட்ரல் சாலையில் உள்ள ஒரு நகை கடையில் கொடுப்பதற்காக சென்று கொண்டிருந்தார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் எழும்பூர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். மோட்டார் சைக்களில் தொடர்ந்து வந்த மர்ம ஆசாமிகள் தன்னுடைய மோட்டார் சைக்களில் வந்திருந்த தங்க, வைர நகை பையை பறித்து சென்று விட்டதாக புகாரில் கூறியிருந்தார்.
எழும்பூர் போலீஸ் இதுகுறித்து விசாரணை நடத்தி வந்தார்கள். இதனிடையே டிராவல்ஸ் நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றும் சுப்பிரமணி என்பவர் செங்குன்றம் காவல் நிலையத்தில் ஒரு பையை நேற்று ஒப்படைத்தார். அதில் தங்க, வைர நகைகள் இருந்தன.
எழும்பூரில் ஒரு சிக்னில் நின்று கொண்டிருந்த போது ஒரு மோட்டார் சைக்களில் இருந்து அந்த பை விழுந்து விட்டது என்றும் அதை அந்த மோட்டார் சைக்கிளில் சென்று நபர் கவனிக்கவில்லை என்றும் அந்த டிரைவர் போலீசாரிடம் தெரிவித்தார். அந்த பையை எடுத்துக்கொண்டு உரியவரிடம் ஒப்படைக்க நினைத்த போது அவரை காணவில்லை.
பயணிகளை கிஸ்கிந்தாவுக்கு அழைத்து சென்று கொண்டிரு்நத நான், அதை முடித்து விட்டு திரும்பி வந்து பையை திறந்து பார்த்தேன். அதில் தங்க, வைர நகைகள் இருந்தது. எனவே ஒப்படைக்க வந்தேன் என்று அந்த டிரைவர் தெரிவித்தார்.
இதுகுறித்து அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. எழும்பூரில் தங்க,வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதாக வந்த புகார் பற்றி தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அந்த நகை பை எழும்பூர் காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
நிலேஷ் சுரானாவை அழைத்து காண்பித்த போது அந்த நகைகள் தான் காணாமல் போனவை என்று கூறியிருக்கிறார்.
இதையடுத்து நகைகளை தவற விட்டுவிட்டு கொள்ளை போனதாக பொய் புகார் கொடுத்த நிலேஷ் சுரானாவை போலீசார் கைது செய்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications