நக்ஸல்கள் மிரட்டல்-ப.சி சென்னை வீட்டுக்கு பாதுகாப்பு
சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு மாவோயிஸ்ட் நக்ஸலைட்டுகளின் மிரட்டல் காரணமாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நக்ஸல்களை ஒடுக்க மத்திய அரசு கடும் நடவடிக்கையில் இறங்கியுள்ள நிலையில் ப.சிதம்பரம் உள்பட மூத்த தலைவர்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்குமாறு மத்திய உளவுத் துறை பரிந்துரைத்துள்ளது.
டெல்லியில் ப.சிதம்பரத்தின் வீட்டுக்கு ஆயுதம் தாங்கிய பாதுகாப்பு போடப்பட்டிருந்தாலும் சென்னை வீட்டில் அவ்வளவு பாதுகாப்பு இல்லை.
இந் நிலையில் நுங்கம்பாக்கம் பை கிராஸ் கார்டனில் உள்ள ப.சிதம்பரத்தின் வீட்டிற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இசட் பிரிவு பாதுகாப்பில் உள்ள அவருக்கு 2 மத்திய படை வீரர்கள்கள் தவிர மாநில காவல்துறையின் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அவரது வீட்டை சுற்றிலும் சதாரண உடையிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சிதம்பரத்தின் குடும்பத்தினருக்கும் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications