ஜெவுக்கு வரவேற்பு-2 பிஆர்ஓக்கள் சஸ்பெண்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை வரவேற்கச் சென்ற 2 மக்கள் தொடர்பு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்ய்பட்டுள்ளனர்.

சென்னை கலெக்டர் அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்பு அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் தங்கையன். தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி வருவபர் சரவணன். இருவரும்
அதிமுக ஆட்சியில் உதவி மக்கள் தொடர்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டவர்கள். இதனால் தீவிர அதிமுக ஆதரவாளர்கள்.

சமீபத்தில், ஜெயலலிதா கொடநாட்டில் இருந்து சென்னை திரும்பிய பின் அதிமுக தலைமை அலுவலகம் வந்தார். அப்போது அவரை தங்கையனும், சரவணனும் வரவேற்றனர்.

இது குறித்து அங்கிருந்த உளவுப் பிரிவு போலீசார் தகவல் தந்ததையடுத்து இந்த இரண்டு பேரையும் சஸ்பெண்டு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

17-இ பிரிவின் கீழ் இவர்களுக்கு 'கல்தா' கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுத்தால், ''பொதுநலன் கருதி சஸ்பெண்ட் செய்வதோடு, அதே பொது நலன் கருதி அதற்கான காரணத்தையும் கூற முடியாது'' என்று அரசு கூறலாம்.

தங்கையனை சென்னை கலெக்டர் ஷோபனா நேரில் அழைத்து சஸ்பெண்ட் உத்தரவை வழங்கினார். சரவணன் விடுமுறையில் இருப்பதால் அவரது வீடு தேடிச் சென்று சஸ்பெண்ட் உத்தரவு வழங்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+