தோழி கழுத்தை நெரித்துக் கொள்ளையடிக்க முயன்று கைதான பெண்ணுக்கு பிரசவம்
சென்னை: தோழியின் கழுத்தை கொடூரமாக நெரித்துக் கொலை செய்ய முயன்று, நகைகளை கொள்ளையடித்துக் கைதாகிய நிறைமாத கர்ப்பிணிக்கு சென்னை மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.
திருவேற்காட்டைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி முத்தரசி (25). நிறைமாத கர்ப்பிணியான இவர் வியாசர்பாடியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சீமந்தத்துக்காக வந்திருந்தார்.
இவரது நெருங்கிய தோழி சுபஸ்ரீ (28). இவர் ஜாபர்கான் பேட்டை ஆர்.வி. நகரில் வசித்து வருகிறார். சமீபத்தில் சீமந்தச் செலவுக்குப் பணம் கேட்பதற்காக தனது கணவர் சரவணன், அவரது நண்பர்கள் ஆனந்த், வினோத் ஆகியோருடன் முத்தரசி, சுபஸ்ரீயின் வீட்டுக்கு சென்றார்.
கர்ப்பிணித் தோழியை வரவேற்று, டீ போட்டுக் கொடுத்து பாசத்துடன் பேசிக் கொண்டிருந்தார் சுபஸ்ரீ. அப்போது தனது சீமந்தச் செலவுக்குப் பணம் கேட்டுள்ளார் முத்தரசி. ஆனால் தன்னிடம் இல்லை என்று சுபஸ்ரீ கூறவே, திடீரென சுபஸ்ரீயை பிடித்து கீழே தள்ளிய முத்தரசி அவரது கழுத்தை நெரித்தார். பின்னர் சுபஸ்ரீயின் மார்பில் ஏறி நின்று கழுத்தில் ஓங்கி மிதித்ததாகவும் கூறப்படுகிறது.
இதில் சுபஸ்ரீ மயங்கி விழுந்தார். அவர் இறந்து விட்டதாக கருதி, 35 பவுன் நகை மற்றும் ரூ. 50 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்த முத்தரசி தனது கணவர் சரவணன் மற்றும் அவரது நண்பர்களுடன் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
குமரன் நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் சுபஸ்ரீ அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு இன்னும் பேச்சு வரவில்லை. இந்த நிலையில் சுபஸ்ரீயும், சரவணனின் இரு கூட்டாளிகளும் சிக்கினர். சரவணன் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார்.
சுபஸ்ரீ கர்ப்பிணி என்பதால் அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்க கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி அவர் சேர்க்கப்பட்டார்.
போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து குழந்தையுடன் முத்தரசி புழல் சிறைக்குக் கொண்டு போகப்பட்டார்.
-
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications