தீயணைப்பு துறை-மீட்புப் பணிக்கு மோப்ப நாய்கள்!
சென்னை: இந்தியாவிலேயே முதல்முறையாக, தமிழக தீயணைப்புத் துறையில் மோப்ப நாய்கள் அடங்கிய மீட்புப் படைப் பிரிவு துவக்கப்பட்டுள்ளது.
இயற்கை சீற்றங்களின்போது இடிபாடுகளில் சிக்குவோரை கண்டறிந்து காப்பாற்ற ஏதுவாக, தீயணைப்பு-மீட்புப் பணிகள் துறை வீரர்களுக்கு மீட்புப் பணிகளில் உதவ சிறப்புப் பயிற்சி பெற்ற 6 மோப்ப நாய்கள் கொண்ட இந்தப் படை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே முதல்முறையாக இந்த பிரிவு தமிழகத்தில்தான் தொடங்கப்பட்டுள்ளது. இதை முதல்வர் கருணாநிதி சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் துவக்கி வைத்தார்.
இது குறித்து தீயணைப்புத்துறை இயக்குனர் நடராஜ் நிருபர்களிடம் பேசுகையில்,
மேலைநாடுகளில் மட்டுமே இது போன்ற டாக் ஸ்குவாட் மீட்புப் பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. சுனாமி, பூகம்பம் போன்ற நேரங்களில் மேலைநாடுகளில் இத்தகைய பிரிவை சேர்ந்த நாய்கள் மிகவும் உதவிகரமாக உள்ளன. அத்தகைய பிரிவு இந்தியாவில் தொடங்குவது இதுவே முதல்முறையாகும்.
டால்மேஷன், லேப்ரடார் வகைகளை சேர்ந்த இந்த நாய்களுக்கு, போலீஸ் மோப்ப நாய்களுக்கு அளிக்கப்படும் பயிற்சியில் இருந்து மாறுபட்ட பயிற்சி வழங்கப்படும். இதற்காக, தாம்பரத்தில் பயிற்சியிடம் அமைக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, சென்ட்பெர்னார்டு எனப்படும் உயர்ரகத்தை சேர்ந்த 2 நாய்களை வாங்க உள்ளோம். இவை உயர்ரக நாய்களாகும். குளிர்பிரதேசமான ஆல்ப்ஸ் மலைப்பகுதியை (சுவிட்சர்லாந்து) பூர்வீகமாகக் கொண்டவை அவை.
அவற்றை, நீலகிரி போன்ற குளிர்ந்த இடங்களில் மீட்புப் பணிக்கு பயன்படுத்திக் கொள்வோம். இதுதவிர, கோவை, மதுரை, திருச்சி போன்ற மற்ற நகரங்களிலும் இந்த மோப்ப நாய் மீட்புப்பிரிவு விரைவில் தொடங்கப்படும் என்றார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications