வருமான வரி கட்டுவதில் லலித் மோடி முதலிடம் -2வது இடத்தில் ஜெகன்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வருமான வரி கட்டுவதில் முதலிடத்தில் இருந்து வருவோர் பட்டியலில் இடம் பெற்றிருந்த மாயாவதி தற்போது அந்தப் பட்டியலிலிருந்து வெளியேறியுள்ளார். அவருக்குப் பதில் புதிதாக ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டி இணைந்துள்ளார்.

இந்தப் பட்டியலில் லலித் மோடி முதலிடத்தைப் பிடித்துள்ளார். ஜெகன் மோகன் ரெட்டி 2வது இடத்திற்கு வந்துள்ளார்.

ஜெகன் மோகன் ரெட்டி 2008-09ம் ஆண்டில் ரூ. 2.92 லட்சம் வரி மட்டுமே கட்டியிருந்தார். ஆனால் இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் அவர் ரூ. 6.6 கோடி அட்வான்ஸ் வரியைக் கட்டியுள்ளார். அவரது தனிநபர் வருமானம் 2009-10ம் ஆண்டில் ரூ. 70 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ. 22 கோடி வரை அவர் வரி கட்டுவார்.

கடந்த ஆண்டின் முதல் பாதியில் ஜெகன் மோகன் ரெட்டி வருமான வரியே கட்டவில்லை. ஆனால் இந்த ஆண்டின் முதல் பாதியில் அவர் ரூ. 6.6 கோடியைக் கட்டியுள்ளார்.

டாப் 100 வருமான வரி கட்டுவோரில் இடம் பெற்றுள்ள ஒரே அங்கீகரிக்கப்பட்ட அரசியல்வாதி ஜெகன் மட்டுமே.

கிரிக்கெட் வீரர்களைப் பொறுத்தவரை கடந்த ஆண்டு சச்சின் டெண்டுல்கர் ரூ. 8 கோடி வரி கட்டினார். இந்த ஆண்டின் முதல் பாதியில் ரூ. 1.5 கோடி வரி கட்டியுள்ளார். டோணிக்கு இதில் 2வது இடம். கடந்த ஆண்டு ரூ. 4.5 கோடி கட்டினார். இந்த ஆண்டு செப்டம்பர் வரை ரூ. 2 கோடியைக் கட்டியுள்ளார். இந்த நிதியாண்டின் இறுதிக்குள் சச்சினை இவர் முந்தி முதலிடத்தைப் பிடித்து விடுவார்.

இந்திய கிரிக்கெட் கிரிக்கெட் நிர்வாகியான லலித் மோடிதான் அனைவரையும் வியக்க வைத்துள்ளார். அத்தனை பேரையும் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளார் இவர்.

இந்த நிதியாண்டின் முதல் பாதியில் இவர் ரூ. 8 கோடி வரி கட்டியுள்ளார். இது டோணியை விட நான்கு மடங்கும், சச்சினை விட ஐந்து மடங்கும் அதிகுமாகும்.

இத்தனைக்கும் 2008-09ல் மோடி மொத்தமாகவே ரூ. 32 லட்சம் மட்டும்தான் வரியாக கட்டியிருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+