முன்னாள் எம்.பி. மோகனின் உடல் தகனம்- தலைவர்கள் அஞ்சலி
மதுரை: சென்னையில் மரணமடைந்த முன்னாள் சிபிஎம். எம்.பி. மோகனின் உடல் நேற்று மதுரை தத்தனேரியில் தகனம் செய்யப்பட்டது.
உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிபிஎம் கட்சியின் முன்னாள் எம்.பி. பி.மோகன் வெள்ளிக்கிழமை மரணமடைந்தார்.
இதையடுத்து அவரது உடல் மதுரைக்குக் கொண்டு வரப்பட்டது. அங்கு அவருடைய வீட்டுக்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டு குடும்பத்தார், உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் மாப்பாளையத்தில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக எடுத்து வரப்பட்டது. அங்கு மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், மு.க.அழகிரி உள்ளிட்டோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
அதிமுக சார்பில் மாநகர் மாவட்டச் செயலாளர் செல்லூர் ராஜு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
சிபிஎம் செயலாளர் வரதராஜன், சிபிஐ நிர்வாகக் குழு உறுப்பினர் நல்லகண்ணு ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.
பொதுமக்களின் அஞ்சலிக்குப் பின்னர் நேற்று மாலை இறுதி ஊர்வலம் கிளம்பியது. தத்தனேரி மயானத்தைச் சென்றடைந்ததும், அங்கு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. சிதைக்கு மோகனின் மகன் பகத்சிங் தீமூட்டினார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications