ஆஸி-நியூசி தூதர்கள் வெளியேற பிஜி உத்தரவு

பிஜி நாட்டின் உள் விவகாரங்களில் இந்த இரு நாடுகளும் தலையிடுவதாகக் கூறி இந்த உத்தரவைப் பிறப்பித்துளளார் அந் நாட்டு அதிபரான கமாண்டர் பிராங் பைனிமரமா.
சில மாதங்களுக்கு முன் இவரது ஆட்சிக்கு எதிராக தீர்ப்பளித்த நீதிபதிகளை கூண்டோடு பதவி நீக்கம் செய்த பிராங், அந் நாட்டு நீதிமன்றங்களை நடத்த இலங்கையைச் சேர்ந்த 7 நீதிபதிகளை நியமித்துள்ளார்.
ஜனநாயகத்துக்கு விரோதமான இந்தப் பணியை ஏற்க வேண்டாம் என ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அரசுகள் இலங்கையிடம் கோரிக்கை வைத்தன. ஆனால், அதை இலங்கை ஏற்கவில்லை.
தனது நாட்டைச் சேர்ந்த 7 மூத்த நீதிபதிகளுக்கு நீண்ட கால விடுப்பு கொடுத்து பிஜி தீவில் பணியாற்ற அனுமதி அளித்தது.
இந் நிலையில் பிஜி தலைநகர் சுவாவுக்கு செல்வதற்காக ஆஸ்திரேலியா வழியாக செல்ல இலங்கை நீதிபதிகள் விசா கேட்டு விண்ணப்பத்திருந்தனர்.
ஆனால், அவர்களுக்கு விசா வழங்க ஆஸ்திரேலிய அரசு மறுத்துவிட்டது. ஆஸ்திரேலியாவின் இந்தச் செயலை நியூசிலாந்தும் ஆதரித்துள்ளது.
இதையடுத்து அந்த நீதிபதிகளை தென் கொரியா வழியாக வருமாறு பிஜி அரசு கூறியுள்ளது.
இந் நிலையில் பிஜியின் நீதித்துறையை கட்டுப்படுத்த ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் முயல்வதாகக் கூறி அந் நாட்டுத் தூதர்களை திரும்பிச் செல்லுமாறு பைனிமரமா உத்தரவிட்டுள்ளார்.
2006ம் ஆண்டு ராணுவ புரட்சி மூலம் ஆட்சிக்கு வந்தார் பைனிமரமா என்பது குறிப்பிடத்தக்கது. இதை நீதிமன்றம் சட்டவிரோதம் என்று அறிவித்ததால் அனைத்து நீதிபதிகளையும் கூண்டோடு பதவி நீக்கம் செய்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications