பன்றிக் காய்ச்சலுக்கு இதுவரை 477 பேர் மரணம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பன்றிக் காய்ச்சல் பலி எண்ணிக்கை 477 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியாவோரின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. நேற்று 2 பேர் இறந்தனர். இதன் மூலம் பலி எண்ணிக்கை 477 ஆனது.
புதிதாக 76 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களையும் சேர்த்து இதுவரை 14,049 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 16 பேர் ஆவர்.
நேற்று இறந்தவர்களில் ஒருவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர். இதன் மூலம் அங்கு இதுவரை 204 பேர் இறந்துள்ளனர்.
2வது நபர் கேரளாவைச் சேர்ந்தவர். இவரையும் சேர்த்து அங்கு இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகம் முழுவதும் கடந்த ஒரு வாரத்தில் 51 நாடுகளில் 535 பேர் இறந்துள்ளனர். அமெரிக்காவின் 38 மாகாணங்களில் கடந்த ஒரே வாரத்தில் 197 பேர் இறந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications