பெங்களூர் ஸ்டேடியத்தில் வெடிகுண்டுடன் வந்ததாக பிடிபட்ட காஷ்மீர் கிரிக்கெட் வீரர் நிரபராதி
பெங்களூர்: பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்திற்கு வெடிகுண்டுடன் வந்ததாக கூறி பிடிபட்ட ஜம்மு காஷ்மீர் மாநில கிரிக்கெட் வீரர் பெர்வேஸ் ரசூல் மீது எந்தத் தவறும் இல்லை என்று தடயவியல் சோதனையில் தெரிய வந்துள்ளது.
கடந்த அக்டோபர் 21ம் தேதி நடந்த சி.கே.நாயுடு கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக ஜம்மு காஷ்மீர் மாநில கிரிக்கெட் அணி பெங்களூர் வந்திருந்தது.
சின்னச்சாமி ஸ்டேடியத்தில் அவர்கள் தங்கியிருந்தனர். இந்த நிலையில் அக்டோபர் 18ம் தேதி ஸ்டேடியப் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த பாதுகாப்புப் படையினரின் மெட்டல் டிடெக்டர் கருவி ஒலிக்க ஆரம்பித்தது.
300 மீட்டர் சுற்றளவுக்குள் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக நிபுணர்கள் சந்தேகப்பட்டனர். இதையடுத்து தீவிர சோதனை நடைபெற்றது.
மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டன. மோப்ப நாய் நேராக 105வது அறைக்குப் போய் நின்றது. அந்த அறையில் ரசூல் மற்றும் மீராஜூதீன் ஆகிய இரு வீரர்கள் தங்கியிருந்தனர்.
அந்த அறையில் இருந்த ரசூலின் பைக்கு அருகில் போய் நாய் நின்றது. இதையடுத்து அந்தப் பையை போலீஸார் சோதனையிட்டபோது அதில் ஆர்.டி.எக்ஸ் வைக்கப்பட்டிருந்ததற்கான தடயம் காணப்பட்டது.
இதையடுத்து ரசூல் மற்றும் மீராஜுதீன் இருவரும் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். இருப்பினும் அடுத்த நாள் ரசூல் விடுவிக்கப்பட்டார்.
இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், சம்பந்தப்பட்ட பையை அதிகாரிகள் தடயவியல் சோதனைக்கு அனுப்பினர். இந்த சோதனையில் ஆர்.டி.எக்ஸ் வைக்கப்பட்டிருந்ததற்கான அடையாளமே இல்லை என்று சோதனை முடிவு தெரிவிக்கிறது.
இதன் மூலம் ரசூல் மீது எந்தத் தவறும் இல்லை என்ற முடிவுக்கு அதிகாரிகள் வந்துள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications