பெரியாறு அணை: கேரளாவின் புதிய மனு-நிராகரித்த சுப்ரீம் கோர்ட்
டெல்லி: ரூர்க்கி ஐஐடி நிபுணர்களை வைத்து தான் நடத்திய ஆய்வறிக்கையை இணைத்து கேரள அரசு தாக்கல் செய்த புதிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
ரூர்க்கி ஐஐடியைச் சேர்ந்த நிபுணர்களைக் கொண்டு கேரள அரசு புதிய ஆய்வை நடத்தியது. அந்த அறிக்கையில், பூகம்பம் வந்தால் முல்லைப் பெரியாறு அணை தரைமட்டமாகி விடும். இதனால் பல லட்சம் உயிர்கள் பறிபோகும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த அறிக்கையை சேர்த்து புதிய மனு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு தாக்கல் செய்திருந்தது.
இன்று முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில், விசாரணைக்கு வந்தது.
அப்போது கேரள அரசின் புதிய மனுவை நீதிபதிகள் ஏற்க மறுத்து தள்ளுபடி செய்து விட்டனர்.
வழக்கு விசாரணைக்கு வந்தபோது கேரள அரசின் புதிய மனுவை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பாப்தே வாதிடுகையில், புதிய அணை கட்டுவதால் நில அதிர்ச்சி வந்தால் அது பாதிக்கப்படாது என்பதற்கான ஆதாரத்தை கேரள அரசு தாக்கல் செய்யவில்லை.
மேலும் நிலநடுக்கம் ஏற்படும் என கேரள அரசு கூறும் பகுதியிலிருந்து 300 கிலோமீட்டர் தொலைவில்தான் முல்லைப் பெரியாறு அணை உள்ளது. எனவே இந்தப் புதிய மனுவை ஏற்கக் கூடாது என்று வாதிட்டார்.
இதையடுத்து கேரள அரசு சார்பில் வழக்கறிஞரிடம், இனிமேல் தமிழகமும் சரி, கேரளாவும் சரி புதிய மனுக்களை இந்த வழக்கில் தாக்கல் செய்யக் கூடாது.
புதிய அணை கட்டினால் மட்டும் பூகம்பத்தைத் தவிர்க்க முடியும் என்று எப்படி நம்ப முடியும். இதை கேரளா தெளிவுபடுத்தவில்லை.
உச்சநீதிமன்றம், முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை நீரைத் தேக்கலாம் என்று உத்தரவிட்ட பின்னரும் அதை நிறைவேற்றாமல், உடனடியாக புதிய சட்டத்தை கேரள அரசு தாக்கல் செய்தது ஏன் என்று சரமாரியாக கேட்டனர்.
கேரள அரசின் இந்த மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்திருப்பதன் மூலம், தமிழக அரசின் வாதத்திற்குப் பெரும் வலு சேர்ந்துள்ளதாக கருதப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications