சேலம் சட்டக்கல்லூரி காலவரையின்றி மூடல்
சேலம்: சேலம் சட்டக் கல்லூரி மாணவர்களிடையே மோதல் நடந்ததையடுத்து கல்லூரி காலவரையின்றி மூடப்பட்டு்ள்ளது.
சேலம் கோரிமேட்டில் உள்ள தனியார் சட்டக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் இடையே நேற்று முன் தினம் நள்ளிரவில் நடுரோட்டில் சண்டை நடந்தது.
வீச்சரிவாள்களால் இரு தரப்பினரும் வெட்டிக் கொண்டதில் 3 பேர் பலத்த காயமடைந்தனர்.
மாணவர்கள் மோதிக் கொண்டதற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. அங்கு ராகிங் பிரச்சனை இருந்து வந்ததாகவும், மூத்த மாணவர்கள் சிலர் ஜூனியர் மாணவர்களிடம் மது வாங்கி வரச் சொல்லி மிரட்டி வந்ததாகவும் சில மாணவர்கள் கூறியுள்ளனர்.
இந் நிலையில் கல்லூரி காலவரையின்றி மூடப்படுவதாகவும், மறு உத்தரவு வரும் வரை கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாகவும் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் பேரணி:
இந் நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் 12ம் தேதி சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி வளாகத்தில் மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டபோது கல்லூரி மூடப்பட்டது.
கல்லூரியுடன் விடுதியும் மூடப்பட்டது. விடுதிகள் மூடப்பட்டதால், 140 மாணவர்கள் வெளியே அறை எடுத்து தங்கியிருந்தனர். அவர்களுக்கு மாதந்தோறும் தலா ரூ.1,000 நிவாரண தொகை வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், இதுவரை நிவாரணைத் தொகை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அமைச்சர்கள் ஆகியோரிடம் அவர்கள் மனு கொடுத்தனர். ஆனால் அவர்களுக்கு நிவாரணத் தொகை கிடைக்கவில்லை.
இதையடுத்து உடனே உதவித் தொகை வழங்கக் கோரி, சட்டக் கல்லூரி மாணவர்கள் இன்று கோட்டையை நோக்கி பேரணி நடத்தினர்.
அவர்கள் கோட்டையை முற்றுகையிட்ட முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கோட்டை நுழைவு வாயிலில் மாணவர்களை தடுத்த போலீசார், அவர்களில் 6 பேரை மட்டும் கோட்டைக்கு சென்று மனு கொடுக்க போலீசார் அனுமதித்தனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications