தமிழக மாலுமியை மீட்க சோமாலியா கடற் கொள்ளையர்களுடன் பேச்சு
தூத்துக்குடி: சோமாலியா கடற் கொள்ளையர்களால் கைப்பற்றப்பட்ட இந்திய கப்பலை மீட்க இடைத் தரகர்கள் மூலம் கொள்ளையர்களுடன் கப்பல் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
மும்பையை சேர்ந்த அல்-காலித் என்ற சரக்கு கப்பல் கடந்த 21ம் தேதி இந்திய மாலுமிகள் உள்பட 24 பேருடன் இந்திய பெருங்கடலில் சென்று கொண்டிருந்தபோது சோமாலியா கடற் கொள்ளையர்கள் கடத்திச் சென்றனர்.
கடத்தப்பட்ட 24 பேரில் தூத்துக்குடியை சேர்ந்த விஜய கணேசும் ஒருவர். கடந்த 14 நாட்களாக கடத்தப்பட்ட கப்பலில் இருந்து எவ்வித தகவலும் கிடைக்காததால் கப்பல் மாலுமிகளது குடும்பத்தினர் மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
நேற்று முன்தினம் மாலை சோமாலியா கடற் கொள்ளையர்களால் சிறை பிடிக்கப்பட்டுள்ள கப்பலின் கேப்டன் ஸ்நேகல் மும்பையில் உள்ள கப்பல் நிறுவன இயக்குனருடன் தொலைபேசியில் பேசியுள்ளார்.
அப்போது கப்பலில் மாலுமிகளுக்கு ஒரு மாத காலத்திற்கு தேவையான உணவு மற்று் தண்ணீர் இருப்பதாகவும், கடற் கொள்ளையர்கள் தங்களை துன்புறுத்தவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலை கப்பல் நிறுவனம் தங்களது குடும்பங்களுக்கு தெரிவித்துள்ளதுடன் இந்திய மாலுமிகள் 245 பேரையும் மீட்க தேவையான நடவடிக்கை எடுக்க மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மாலுமிகளை மீட்பதற்கான முயற்சியில் அகில இந்திய கப்பல மாலுமிகள் சங்கமும் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இச்சங்கத்தின் உதவிச் செயலாளரான எல்.பி.விமல்சன் மும்பையிலிருந்து நேற்று முன்தினம் தூத்துக்குடி வந்து விஜய் கணேஷின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் மாலுமிகளை மீட்கும் நடவடிக்கை குறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
கப்பலின் தொலை தொடர்புகளை சோமாலியா கடற் கொள்ளையர்கள் கடந்த 10 நாட்களாக துண்டிதிருந்ததால் கப்பல் மாலுமிகள் நிலை குறித்து எவ்வித தகவலும் இல்லாமல் இருந்தது.
நேற்று முன்தினம் கப்பல் கேப்டன் நிறுவனத்துடன் பேசியுள்ளார். பிடியிலுள்ள மாலுமிகளை மீட்க இடைத்தரகர்கள் மூலம் அந்த கப்பல் நிறுவனம் கொள்ளையர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவகாக தகவல் கிடைத்துள்ளது என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications