காங்.-தேசியவாத காங். சிக்கல் தீர்ந்தது: நாளை மகாராஷ்டிர அரசு பதவியேற்பு
மும்பை: அமைச்சர் பதவி தொடர்பாக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இடையே ஏற்பட்ட இழுபறி முடிவுக்கு வந்துள்ளது. இரு கட்சிகளிடையே இதுதொடர்பாக உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நாளை புதிய அரசு பதவியேற்கும் எனத் தெரிகிறது.
இன்று இரு கட்சிகளையும் சேர்ந்தவர்களுக்கான அமைச்சர் பதவிகள் இறுதி செய்யப்படுகிறது. இதையடுத்து அக்டோபர் 22ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானது முதல் நிலவி வந்த இழுபறி முடிவுக்கு வருகிறது.
தற்போது ஏற்பட்டுள்ள உடன்பாட்டின்படி இரு கட்சிகளையும் சேர்ந்த தலா 20 பேர் அமைச்சர்களாகவுள்ளனர்.
முதலில் தேசியவாத காங்கிரஸை விட தங்களுக்கு கூடுதலாக ஒரு அமைச்சர் பதவி தர வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல தங்களுக்கு பணம் கொழிக்கும் துறைகள் வேண்டும் என்று தேசிவாத காங்கிரஸ் கோரி வந்தது.
ஆனால், இரு தரப்பும் இருவரின் கோரிக்கைகளையும் ஏற்க மறுத்ததால் இழுபறி நீடித்தது.
இந் நிலையில் இப்போதைக்கு தலா 20 அமைச்சர்களுடன் பதவியேற்பது, மேலும் 2 அமைச்சர் பதவிகளை அப்புறமாக பிரித்துக் கொள்வது, துறைகளையும் பின்னர் பேசி பிரித்துக் கொள்வது என்ற சமாதானத் திட்டத்துடன் இன்று பதவியேற்கிறது இந்தக் கூட்டணி.












Click it and Unblock the Notifications