ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் கோடாவின் உதவியாளர் கைது
Subscribe to Oneindia Tamil
ராஞ்சி: ஹவாலா வழக்கில் சிக்கியுள்ள ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் மது கோடாவின் உதவியாளரான விகாஸ் சின்ஹாவை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
பண மோசடி, சட்டவிரோத முதலீடுகள் தொடர்பாக இவர் கைது செய்யப்பட்டுள்ளார். ராஞ்சியில் வைத்து இவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் இன்னொரு குற்றவாளியான பினோத் சின்ஹாவின் சகோதரர்தான் விகாஸ்.
இவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கத் திட்டமிட்டுள்ளனர். ஹவாலா மூலமாக கோடாவின் பணத்தை இவர்தான் சுற்றுக்கு விட்டு வந்துள்ளதாக அமலாக்கப் பிரிவு குற்றம் சாட்டியுள்ளது.
ஹவாலா வழக்கில் கைதாகியுள்ள முதல் கோடா உதவியாளர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் எட்டு பேரை அமலாக்கப் பிரிவினர் கைது செய்யத் திட்டமிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications