டிஸ்சார்ஜ் ஆனார் மது கோடா டிஸ்சார்ஜ் - இன்றே கைது?
Subscribe to Oneindia Tamil

ராஞ்சியில் உள்ள அப்துல் ரஸாக் வீவர்ஸ் நினைவு மருத்துவமனையில் கோடா அனுமதிக்கப்பட்டார். வயிற்று வலி, ரத்த அழுத்தம் காரணமாக அவர் சேர்க்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவரது உடல் நலம் ஸ்திரமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. அவர் டிஸ்சார்ஜ் செய்யத் தகுதியான நிலையில் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து அவரை டிஸ்சார்ஜ் செய்யும் நேரத்தை முன்கூட்டியே தங்களுக்குத் தெரிவிக்குமாறு மருத்துவமனை நிர்வாகத்திற்கு அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கூறியிருந்தனர்.
இந்த நிலையில் இன்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவரை இன்றே கைது செய்ய அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
கைது செய்யப்பட்டதும் மது கோடாவிடம், அமலாக்கப் பிரிவினர், வருமான வரித்துறையினர் தீவிர விசாரணை நடத்தவுள்ளனர்.












Click it and Unblock the Notifications