மாவோயிஸ்டுகளுக்கு சீனாவிலிருந்து ஆயுதம் வருகிறது- உள்துறைச் செயலாளர்
டெல்லி: மாவோயிஸ்ட் நக்சலைட்டுகளுக்கு சீனாவிலிருந்து ஆயுதங்கள் வருவதாக மத்திய அரசு முதல் முறையாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய உள்துறைச் செயலாளர் ஜி.கே.பிள்ளை கூறுகையில், சிறு ஆயுதங்களை கடத்துவதிலும், விற்பனை செய்வதிலும் சீனர்கள் மிகப் பெரிய அளவில் செயல்பட்டு வருகின்றனர். இப்படிப்பட்டவர்களிடமிருந்து மாவோயிஸ்டுகள் பெருமளவில் ஆயுதங்களைப் பெறுவதாக உறுதியாக நம்புகிறோம்.
ஆயுத சப்ளையைக் கடந்து மாவோயிஸ்டுகளுக்கும், சீனாவுக்கும் இடையிலான தொடர்பு குறித்து எங்களிடம் உறுதியான தகவல் இல்லை. இருப்பினும் ஆயுதங்களை மட்டுமே மாவோயிஸ்டுகள் பெறுவதாக நம்புகிறோம் என்றார் பிள்ளை.
ஆனால் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், சீனாவுக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் தொடர்பு இருப்பதாக தான் நினைக்கவில்லை என்று கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications