எதியூரப்பா- ரெட்டி சகோதர்கள் இடையிலான பிரச்சினை தீர்ந்தது
டெல்லி: கர்நாடக முதல்வர் எதியூரப்பாவுக்கும், பெல்லாரி சகோதரர்கள் எனப்படும் அமைச்சர்கள் கருணாகர ரெட்டி, ஜனார்த்தன ரெட்டிக்கும் இடையிலான பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக பாஜக மேலிடம் தெரிவித்துள்ளது. இவர்கள் இனிமேல் சகோதரர்களாக செயல்படுவார்கள் என பாஜக மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
எதியூரப்பாவுக்கும், ரெட்டி சகோதரர்களுக்கும் இடையே ஏற்பட்ட பெரும் லடாயால் கர்நாடக பாஜக ஆட்சிக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டது. எதியூரப்பாவை மாற்றியே ஆக வேண்டும் என ரெட்டி சகோதரர்கள் ஒற்றைக் காலில் நின்றதால் சுமூகத் தீர்வு காண முடியாமல் பாஜக மேலிடம் தவித்தது.
ஜனார்த்தன ரெட்டியும், கருணாகர ரெட்டியும், எதியூரப்பாவுக்கு எதிராக எம்.எல்.ஏக்களைத் திரட்ட ஆரம்பித்ததால் பாஜக ஆட்சி கவிழக் கூடிய ஆபத்துகளும் அதிகரித்தன.
இந்த நிலையில் இன்று டெல்லியில், எதியூரப்பாவை ஜனார்த்தன ரெட்டி சந்தித்துப் பேசினார். இவர்கள் இருவரையும் சந்திக்க வைத்தவர் சுஷ்மா சுவராஜ். இந்த சந்திப்பின்போது இரு தரப்புக்கும் இடையிலான வேறுபாடுகள் களையப்பட்டனவாம்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் சுஷ்மா சுவராஜ். அப்போது அவர் கூறுகையில், பாஜகவில் ஏற்பட்ட நெருக்கடிக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. சுமூகமான முறையில் தீர்வு கண்டுள்ளோம்.
இனிமேல், எதியூரப்பாவும், ரெட்டி சகோதரர்களும் சகோதரர்களாக செயல்படுவார்கள், பாஜகவை வலுப்படுத்துவார்கள் என்றார்.
ஜனார்த்தன ரெட்டி கூறுகையில், கர்நாடகத்தின் நலனைக் கருத்தில் கொண்டு நானும், கர்நாடக பாஜக எம்.எல்.ஏக்களும் (அதிருப்தி) முதல்வர் எதியூரப்பாவுடன் இணைந்து செயல்படுவோம் என்றார்.
எதியூரப்பாவும், ஜனார்த்தன ரெட்டியும் தோள் மேல் கை போட்டுக் கொண்டு புன்னகையுடன் போட்டோவுக்கு போஸும் கொடுத்தனர்.
-
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications