குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் முகோபாத்தியா
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.ஜெ.முகோபாத்தியா, குஜராத் உயர்நீதி்மன்ற தலைமை நீதிபதியாகிறார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஜெ.முகோபாத்தியா, இப்ராஹிம் கலிபுல்லா ஆகியோரை வெளிமாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளாக நியமிக்க சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான நீதிபதிகள் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.
இவர்களில் நீதிபதி எஸ்.ஜெ.முகோபாத்தியாவிற்கு மட்டும் தற்போது உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வாய்ப்பு கிடைத்துள்ளது.
பீகாரைச் சேர்ந்த நீதிபதி முகோபாத்தியாவை, ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கவேண்டும் என்று முதலில் பரிந்துரைக்கப்பட்டது. பின்னர் இமாசல பிரதேச தலைமை நீதிபதியாக நியமிக்க அவர் பரிந்துரை செய்யப்பட்டார். ஆனால், இப்போது அவர் குஜராத் உயர்நீதமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லாவை, இமாசலப்பிரதேச உயர்நீதி்மன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டு, தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
