பெஷவாரில் மறுபடியும் தற்கொலைப் படைத் தாக்குதல் - 8 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் இன்று மீண்டும் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
உள்ளூர் மேயரைக் குறி வைத்து இந்தத் தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் மேயர் உள்பட 8 பேர் இறந்தனர். 31 பேர் காயமடைந்துள்ளனர்.
2 வாரங்களுக்கு முன்புதான் இதே நகரில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் கிட்டத்தட்ட 120 பேர் கொல்லப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் தற்போது மீண்டும் அங்கு தற்கொலைப் படைத் தாக்குதல் நடந்திருப்பதால் அப்பாவி மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர்.
உள்ளூர் மேயரான அப்துல் மாலிக், இளம் பெண் உள்ளிட்டோர் கொல்லப்பட்டவர்களில் சிலர்.
உள்ளூர் நேரப்படி காலை 9.30 மணிக்கு குண்டுவெடிப்பு நடந்தது. நெரிசல் அதிகம் மிக்க மார்க்கெட் பகுதியில் குண்டு வெடித்தது.












Click it and Unblock the Notifications