வருவேன்..தெரியலை..வரமாட்டேன்..வருவேன்: சிவத்தம்பி 'உறுதி'
சென்னை: வருவாரா, மாட்டாரா என்பதில் பெரும் குழப்பம் நிலவி வந்த நிலையில் கோவையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் தான் பங்கேற்கவிருப்பதாக இலங்கை தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி உறுதிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து சென்னை பல்கலைக்கழக மாணவர் தேவானந்த் என்பவருக்கு அவர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
கோவையில் அடுத்த ஆண்டு ஜூன் 24ம் தேதி முதல் 27ம் தேதி வரை உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க வருமாறு சிவத்தம்பிக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்திருந்தது.
ஆனால் இதில் சிவத்தம்பி கலந்து கொள்ளக் கூடாது என்று பல்வேறு ஈழத் தமிழ் அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. சிவத்தம்பியும், ஆரம்பத்தில் இந்த மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை. அந்த சூழ்நிலை தற்போது இல்லை என்று கூறியிருந்தார்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் முதல்வர் கருணாநிதி விடுத்த அறிக்கையில், சிவத்தம்பி மாநாட்டில் பங்கேற்பதாக தெரிவித்தார். மேலும், மாநாட்டில் இடம் பெற வேண்டிய சில முக்கிய அம்சங்களை சிவத்தம்பியே ஆலோசனையாக கூறியுள்ளதாகவும் விளக்கியிருந்தார்.
இதனால் சிவத்தம்பி வருகை குறித்து பெரும் குழப்பம் ஏற்பட்டது. பின்னர் சிவத்தம்பி பிபிசிக்கு அளித்த பேட்டியில், மாநாட்டுக்கு இன்னும் நாள் உள்ளது. எனவே இதுகுறித்து முடிவெடுக்க கால அவகாசம் உள்ளது என்று கூறியிருந்தார். இதனால் குழப்பம் கூடியது.
இந்த நிலையில் தான் மாநாட்டில் பங்கேற்கவிருப்பதாக சிவத்தம்பி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சிவத்தம்பி தனது பேட்டியில் கூறுகையில், இதை பல்டி என்று கூட நீங்கள் கூறிக் கொள்ளுங்கள். ஆனால், நான் எனது மனதை மாற்றிக் கொண்டுள்ளேன். மாநாட்டில் பங்கேற்க முடிவு செய்துள்ளேன்.
நான் ஒரு தமிழறிஞர். தமிழக அரசு தமிழுக்காகவும், இந்த மாநாட்டுக்காகவும் பல கோடி ரூபாய்களை செலவழித்துக் கொண்டிருக்கிறது. எனவே இந்த மாநாட்டில் பங்கேற்க தீர்மானித்துள்ளேன். இதற்கு என்ன மாதிரியான அரசியல் நோக்கம் கற்பிக்க்கப்பட்டாலும் நான் கவலைப்படவில்லை.
இந்த மாநாடு குறித்து முதல்வர் கருணாநிதி அறிவித்தபோது நான் இலங்கைத் தமிழர் துயரம் குறித்து உரிய கவனம் செலுத்த வேண்டும் என அவருக்கு நான் கோரிக்கை விடுத்தேன்.
உலகத் தமிழ் மாநாடு என்ற பெயரை உலகத் தமிழ் செம்மொழி மாநாடு என்று முதல்வர் கருணாநிதி பெயர் மாற்றி அறிவித்தபோது இலங்கைத் தமிழர் துயரம் குறித்து குறிப்பிட்டிருந்தார்.
முதல்வர் கருணாநிதி இலங்கைத் தமிழர் பிரச்சினையில் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை என்ற எனது கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டைப் புறக்கணிப்பதன் மூலம், இலங்கைத் தமிழர்களுக்கு எந்தவித நன்மையும் கிடைத்து விடப் போவதில்லை.
முதல்வர் கருணாநிதியை அரசியல் ரீதியாக எதிர்ப்பதன் மூலம் இந்த மாநாடு தடம் புரண்டு போய் விடக் கூடாது என்று நான் விரும்புகிறேன். செம்மொழி அந்தஸ்தை தமிழ் திரும்பப் பெற என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட வேண்டும்.
ஆரம்பத்தில் எனது உடல் நிலையைக் கருத்தில் கொண்டு இந்த மாநாட்டில் பங்கேற்க வேண்டாம் என்ற முடிவை எடுத்தேன். தற்போது அதை மாற்றிக் கொண்டு விட்டேன். இதை பல்டி என்றும் சிலர் வர்ணிக்கலாம். ஆனால் இதுதான் எனது நிலை.
சிவத்தம்பி இரட்டை நாக்குடன் பேசுவதாக பலரும் நினைக்கலாம். ஆனால் இந்த விஷயத்தில் குழப்பம் ஏற்படக் காரணம், எனது மனதில் ஏற்பட்ட இரண்டு விதமான அறிவுப்பூர்வமான விவாதங்கள்தான். இதனால் மட்டும் நான் உறுதியான நிலைப்பாட்டை எதிலும் கொண்டிருக்கவில்லை என்று கூறி விடக் கூடாது என்றார் சிவத்தம்பி.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications