சிறுவன் உயிரை பறித்த ஹோமா செக்ஸ் வெறியன் கைது

கரூர் வடக்கு காந்திகிராமம் பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் மகன் பிரபாகரன் (7). இவர் கடந்த ஜூலை 12 ம் தேதி வீட்டு அருகில் விளையாடிக் கெண்டிருந்த போது காணாமல் போனார்.
இது குறித்து பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் சிறுவனின் தந்தை சந்திரசேகரன் புகார் செய்தார்.
புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ் தலைமையில் தனிப்படையினர் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் அதே தெருவைச் சேர்ந்த மசாலா வியாபாரி தங்கவேல் மகன் சரவணன் (21) மீது போலீஸார் சந்தேகப்பட்டு விசாரித்த போது,அவர் சிறுவன் பிரபாகரனை ஹோமோ செக்ஸ்க்கு அழைத்து கொலை செய்துவிட்டதாக ஒப்புக்கொண்டார்.
மேலும், கொலை செய்யப்பட்ட சிறுவனை சாக்கு மூட்டையில் கட்டி வடக்குபாளையம் பெட்ரோல் பங்கு அருகே சரவணன் புதைத்து விட்டாதாகவும் வாக்கு மூலம் அளித்துள்ளார்.
மேலப்பாளையம் வி.ஏ.ஓ.தாமோதரன் முன்னிலையில், சிறுவன் புதைக்கப்பட்ட இடத்தில் சிறுவன் எலும்பு கூடுகள் நேற்று தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை நடைபெற்று அதே இடத்தில் புகைப்பட்டது.
ஹோமோ செக்ஸ் வெறியன் சரவணனை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications