இடைத் தேர்தல்: கேரளா-மே.வங்கத்தில் இடதுசாரிகளுக்கு பெரும் தோல்வி
டெல்லி: கேரளா, மேற்கு வங்கத்தில் நடந்த சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் காங்கிரஸ், மற்றும் கூட்டணிக் கட்சியான திரிணமூல் காங்கிரஸ் பெறும் வெற்றி பெற்றுள்ளன.
கேரளம், மேற்கு வங்கம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேச, அஸ்ஸாம், சட்டீஸ்கர், ஹிமாச்சலப் பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் 31 சட்டசபை தொகுதிகளுக்கும் உத்தரப் பிரதேசத்தில் பெரோசாபாத் மக்களவைத் தொகுதிக்கும் கடந்த 7ம் தேதி இடைத் தேர்தல் நடந்தது.
இந்த வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில் கேரளத்தில் கன்னூர், எர்ணாகுளம், ஆழப்புலா ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. இந்த 3 தொகுதிகளிலும் இடதுசாரிகளுக்கு படுதோல்வி கிடைத்துள்ளது.
இந்த 3ல் இரு தொகுதிகளிலும் பாஜகவுக்கு டெபாசிட் காலியானது.
மே.வங்கத்தில் மம்தா-காங் கூட்டணி வெற்றி:
அதே போல மேற்கு வங்கத்தில் 10 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில் 8 தொகுதிகளில் காங்கிரஸ்-திரிணமூல் காங்கிரஸ் வென்றுள்ளது.
இன்னொரு தொகுதியி்ல் கோர்கா முக்தி மோர்ச்சா வென்றுள்ளது. ஒரே ஒரு இடத்தில் மட்டும் தான் இடதுசாரிக் கூட்டணி வென்றுள்ளது. இதன்மூலம் இந்த மாநிலத்திலும் இடதுசாரிகள் பேரிடி விழுந்துள்ளது.
மாயாவதி கட்சி முன்னிலை:
உத்தரப் பிரதேசத்தில் இடைத் தேர்தல் நடந்த 11 சட்டமன்றத் தொகுதிகளில் 8ல் முதல்வர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி வென்றுள்ளது.
ஓரிடத்தில் காங்கிரஸ் கட்சியும், இன்னொரு இடத்தில் பகுஜன் சமாஜ் அதிருப்தி வேட்பாளர் வென்றார்.
உள்ளனர்.
சமாஜ்வாடி கட்சியும் பாஜகவும் ஓரிடத்தில் கூட வெல்லவில்லை.
இமாச்சலப் பிரதேசத்தில் 2 தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில் காங்கிரசும், பாஜகவும் தலா ஓரிடத்தில் வெற்றி பெற்றன.
ராஜஸ்தானில் தேர்தல் நடந்த 2 தொகுதிகளிலும் காங்கிரசே முன்னிலையில் உள்ளது. பாஜக பின் தங்கியுள்ளது.
ராஜ் பப்பார் Vs டிம்பிள் யாதவ்:
உத்தரப் பிரதேச மாநிலம் பெரோசாபாத் மக்களவைத் தொகுதிகியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ராஜ் பப்பார், தன்னை எதி்ர்த்துப் போட்டியிட்ட சமாஜ்வாடிக் கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவின் மருமகள் டிம்பிள் யாதவை 83,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications