எஸ்எஸ்எல்சி, பிளஸ்-2: புகைப்படத்துடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ்- அரசு திட்டம்
சென்னை: எஸ்எஸ்எல்சி, பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கு புகைப்படத்துடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ் வழங்க பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில்,
இந்தியாவிலேயே முதல் முறையாக 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் புதிய திட்டம் அடுத்த கல்வி ஆண்டில் (2010-11) நடைமுறைப்படுத்தப்படும்.
இந்தத் திட்டத்தின் மூலம் மதிப்பெண் பட்டியலில் மோசடி, ஆள் மாறாட்டம் செய்ய முடியாது. முறைகேடு நடப்பதை தடுப்பதற்காக இந்த முறை கொண்டு வரப்படுகிறது.
இந்தத் திட்டத்தை இஎஸ்எல்சி மதிப்பெண் பட்டியலில் பரீட்சார்த்த முறையில் கொண்டு வந்தோம். அது வெற்றி பெற்றுள்ளது.
எனவே எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல்களிலும் இதே முறையை பின்பற்ற திட்டமிட்டுள்ளோம்.
மாணவர்களின் புகைப்படத்துடன் மதிப்பெண் பட்டியல் வழங்கினால் அதை நகல் எடுத்து அனுப்பும்போகு கெசடட் அதிகாரியின் கையெழுத்தும் தேவையில்லாமல் போகும்.
மார்க் பட்டியலில் ஏற்கனவே கண்ணுக்கு தெரியாத சங்கேத குறியீடுகள் உள்ளன. இதையும் மீறி மோசடி நடப்பதை தடுக்கவே இந்தத் திட்டத்தை கொண்டு வருகிறோம்.
இதை இந்தக் கல்வி ஆண்டில் கொண்டு வருவது சிரமம். எனவே அடுத்த கல்வி ஆண்டில் நடைமுறைப்படுத்த தீவிரமாக ஆராய்ந்து அறிக்கை தருமாறு தேர்வுத்துறை இயக்குனருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே மாணவர்களின் ஹால் டிக்கெட்டில் புகைப்படம் உள்ளது. அதையே பயன்படுத்தி கொள்ளலாமா? என்றும் கேட்டிருக்கிறைம் என்றார்.
இதுபற்றிய அறிவிப்பு அடுத்த பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியாகும் என்று தெரிகிறது.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications