குமரியில் பரவும் மர்ம காய்ச்சல்-சிறுவன் பலி
நாகர்கோவில்: நாகர்கோவிலில் மர்ம காய்ச்சலுக்கு 6 வயது சிறுவன் பலியானான். இது டெங்கு காய்ச்சல் என மக்கள் கூறுகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் சமீபகாலமாக காய்ச்சல் மாவட்டமாக திகழ்ந்து வருகிறது.
டெங்கு காய்ச்சல், சிக்கன்குனியா, எலி காய்ச்சல் என பல்வேறு காய்ச்சல் நோய் தாக்குதலால் மாவட்டமே முடங்கிப் போயுள்ளது.
கடந்த சில மாதங்களாக பன்றி காய்ச்சல் பீதி மாவட்டங்களை வாட்டி வதைத்தது. இந்நிலையில் பல்வேறு இடங்களில் டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகளுடன் சிலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாகர்கோவில் கட்டையான்விளை பகுதியை சேர்ந்தவர் சரவணன், இவரது மகன் ஜாஸ்பர். அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தான். கடந்த சில நாட்களுக்கு முன்னால் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தான் ஜாஸ்பர். பார்வதிபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிக்சை பெற்றான்.
சிகிச்சை பலன் அளிக்காததால் மேல் சிகிச்சைக்காக அருகில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டான். அங்கும் சிகிச்சை பலன் அளிக்காததால் திருவனந்தபுரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டான். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ஜாஸ்பர் இறந்தான்.
இந்த சிறுவன் டெங்கு காய்ச்சலால் இறந்ததாக அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த நாகர்கோவில் நகர்நல அலுவலர் டாக்டர் போஸ்கோ ராஜன் தலைமையிலான குழுவினர் கட்டையான்விளை பகுதிக்கு சென்று காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டிருந்த சிலரின் ரத்த மாதிரிகளை எடு்த்து டெங்கு காய்ச்சல் இருக்கிறதா என கண்டறிய அனுப்பினர்.
மேலும் அந்த பகுதியில் புகை மருந்து, தெளிப்பான் மருந்து அடித்து சுகாதாரத்தை பேணினர். ஜாஸ்பர் வீட்டில் உள்ளவர்களுக்கு தடுப்பு மருந்து அளிக்கப்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications