இன்டர்நெட்டில் சிறார்களின் ஆபாச படம்: டச்சு நபரிடம் சென்னை போலீஸ் விசாரணை
சென்னை: சிறார்களின் ஆபாசப் படத்தை இன்டர்நெட்டில் வெளியிட்டு சிக்கியுள்ள டச்சு நாட்டுக்காரரிடம் சென்னை போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சென்னையில் இவர் இதற்கு முன்பு தங்கியிருந்த இடங்களில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டாரா என்பதை அறிவதற்காக இந்த விசாரணை நடைபெறுகிறது.
வில்லியம்ஸ் என்ற அந்த டச்சு நாட்டுக்காரர் கடந்த 30 வருடங்களாக சென்னையில் வசித்து வருகிறார். சூளைமேட்டில் தற்போது தங்கியுள்ள வீட்டில்வைத்து நவம்பர் 7ம் தேதி இவரை போலீஸார் கைது செய்தனர்.
சிறார்களின் ஆபாசப் படத்தை இன்டர்நெட்டில் அவர் வெளியிட்டு வந்தார். இதுகுறித்து இன்டர்போல் போலீஸார் கொடுத்த தகவலின்பேரில் வில்லியம்ஸ் கைது செய்யப்பட்டார்.
கடந்த 2002ம் ஆண்டு இவர் மகாபலிபுரத்தில் தங்கியிருந்தபோது சிறார்களை பாலியல் ரீதியாக தவறான முறையி்ல பயன்படுத்தியதாக பெரும் சர்ச்சை எழுந்தது. பின்னர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த அவர் தலைமறைவாகி சென்னைக்கு வந்து விட்டார்.
இவரிடம் நடத்தப்படும் விசாரணை குறித்து போலீஸ் ஆணையர் ராஜேந்திரன் கூறுகையில், வில்லியம்ஸை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. விரைவில் இவரை நாடு கடத்தத் தேவையான நடவடிக்கைகள் குறித்து சட்ட ரீதியான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications