தாய்-மகன் கொலை வழக்கு- நீதிமன்றம் கடும் கண்டனம்; போலீஸ் மீண்டும் விசாரணை

மேலும், தற்போது இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என்று கூறப்படுவதை ஆதாரப்பூர்வமாக போலீஸ் தரப்பு மறுக்காதையும் உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது.
சென்னை அசோக் நகரில் வசித்து வந்த அனந்தலட்சுமி, மற்றும் அவரது மகன் சூரஜ் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். கத்திரிக்கோலால் கழுத்தை அறுத்து இருவரும் கொல்லப்பட்டிருந்தனர்.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீஸார் மருந்துக் கம்பெனியின் பிரதிநிதி, கேரளப் பெண் தான்யா உள்ளிட்ட 4 பேரைக் கைது செய்தனர்.
வழக்கு முடிவுக்கு வந்ததாக அனைவரும் கருதிய நிலையில் திடீர் திருப்பமாக தனியார் துப்பறியும் நிறுவனத்தைச் சேர்ந்த வரதராஜுலு என்பவர் புதிய வீடியோ ஒன்றை பத்திரிகை மூலம் வெளியிட்டார்.
அதில், கைது செய்யப்பட்டுள்ள யாருமே உண்மைக் குற்றவாளிகள் இல்லை. உண்மையான குற்றவாளி இவர்கள் கிடையாது என்று கூறப்பட்டிருந்தது. மேலும், வேறு சிலரை குற்றவாளியாகவும் அதில் சித்தரித்திருந்தார் வரதராஜுலு.
இதனால் போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். இது தவறு என்று கூறிய அவர்கள் அவசரம் அவசரமாக வரதராஜுலு மீது வழக்குப் பதிவு செய்தனர். அவரைப் பிடித்து உள்ளே தள்ளவும் முயற்சிகள் நடந்தன
இதையடுத்து வரதராஜுலு, சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த நீதிபதி சுதந்திரம், வரதராஜுலுவுக்கு முன்ஜாமீன் வழங்கி/lse'g இந்த வழக்கு தொடர்பாக போலீஸார் நடந்து கொண்ட விதம் குறித்தும் கண்டனம் தெரிவித்தார்.
நீதிபதி கூறுகையில், கைதானவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. இதனை நிரூபிப்பது புலனாய்வு அதிகாரியின் கடமையாகும். இதனை செய்ய போலீசார் தவறி விட்டனர்.
வீடியோவில் ஒருவர் அளித்த வாக்குமூலம் சந்தேகத்தை எற்படுத்தியுள்ளது. எனவே உண்மை வெளிவர சிறப்பு அதிகாரியை நியமித்து விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இதையடுத்து இந்த வழக்கு மறுபடியும் விசாரிக்கப்படவுள்ளது. கோர்ட்டின் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளதால், விரைவில் உதவி ஆணையர் அந்தஸ்திலான அதிகாரியை நியமித்து இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிகிறது.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications