இந்தியன் ஆயில் எண்ணெய் கிடங்கு எரிந்த பகுதியில் 'கருப்பு மழை'!- மக்கள் பீதி
ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூர் அருகே சில தினங்களுக்கு முன்பு பெரும் தீவிபத்து ஏற்பட்ட இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்குச் சொந்தமான டிப்போ உள்ள பகுதியில் இன்று மழை நீர் கருப்பாக இருந்ததால் மக்கள் பீதியடைந்தனர்.
ஜெய்ப்பூர் அருகே சங்கேங்கர் என்ற இடத்தில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரஷேன் டிப்போவில் சமீபத்தில் பெரும் தீவிபத்து ஏற்பட்டது.
இந்த நிலையில் இன்று சங்கேங்கர் பகுதியில் மழை பெய்தபோது அது கருப்பு நிறமாக இருந்தது. மேலும், கருப்பு நிறத்திலான பசை போன்ற பொருள் மக்கள் மீது விழுந்தது.
வாகனங்களில் சென்றோர், நடந்து சென்றோர் மீது இந்த கருப்பு நிற பொருள் விழுந்து அப்பிக் கொண்டது. மேலும் வீட்டுக் கூரைகளின் மீதும் இந்த கரும்படலம் ஒட்டிக் கிடந்தது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், தீவிபத்தினால் ஏற்பட்ட புகை மண்டலம் வான்வெளியில் இருந்திருக்கும். இதனால் மழை பெய்தபோது அது கரும்படலமாக விழுந்துள்ளது.
மழை நீருடன் இந்த அழுக்கு தற்போது வந்திருக்கிறது. மழை ஓய்ந்து வெயில் அடித்தவுடன் இது மறைந்து போய் விடும் என்றனர்.
இதுகுறித்து மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், இதனால் எந்த ஆபத்தும் கிடையாது. கரும்படலம் விழுந்த உடைகள், வாகனங்களை நல்ல தண்ணீரை விட்டுக் கழுவினால் போதும், போய் விடும் என்றார்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications